காரிமங்கலம் பேரூராட்சியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டும் பணியை பேரூராட்சி தலைவர் ஆய்வு - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 24 நவம்பர், 2024

காரிமங்கலம் பேரூராட்சியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டும் பணியை பேரூராட்சி தலைவர் ஆய்வு


காரிமங்கலம் பேரூராட்சி ஏரியின் கீழுர் 14-வது வார்டு கைலாசகவுண்டர் கொட்டாய் பகுதியில் குடிநீர் தேவைக்காக வார்டு பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கை ஏற்று கடந்த மாதம் தர்மபுரி மாவட்டம் வருகை தந்த நகர்ப்புற வளர்ச்சி மற்றும் குடிநீர் வழங்கள் துறை அமைச்சர் நேரு மற்றும் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோர் கலைஞர் நகர் புறம் மேம்பாடு திட்டத்தின் கீழ் ரூ.43 லட்சம் மதிப்பீட்டில் 2024-25 ஒருங்கிணைந்த குடிநீர் மேம்பாட்டு பணி 1லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கும் இத்திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினர். இதனைத் தொடர்ந்து கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. பேரூராட்சி தலைவர் பி சி ஆர் மனோகரன், வார்டு கவுன்சிலர் ரமேஷ் மற்றும் அதிகாரிகள் நிர்வாகிகள் உடன் ஆய்வு செய்தனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad