ஒகேனக்கலில் ரூபாய் 18.50 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப் பணிகளை தமிழக முதல்வர் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 26 நவம்பர், 2024

ஒகேனக்கலில் ரூபாய் 18.50 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப் பணிகளை தமிழக முதல்வர் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.


தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கலில் தமிழக அரசு சுற்றுலாத்துறை சார்பில் ரூபாய் 18.50 கோடி மதிப்பீட்டில் பல்வேறு திட்டப் பணிகளுக்கு கட்டுமான பணிகள் முடிவு பெற்ற நிலையில் இன்று தமிழக முதல்வர் காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.  ஆண்கள் பெண்களுக்கு என தனித்தனியாக மசாஜ் அறைக்கான கட்டிடம், உடை மாற்றும் அறை, காவிரி ஆற்றில் உள்ள மெயின் அருவிகளையும் இயற்கை அழகையும்சுற்றுலா பயணிகள் ரசிக்கும் வகையில் சீரமைக்கப்பட்ட தொங்கும் பாலம், உணவகம், நடைபாதை, ஐந்து அருவியை பார்த்து ரசிக்கக்கூடிய உயர்மட்ட வியூ பாயிண்ட் என பல்வேறு திட்டப் பணிகளை இன்று நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது. குறிப்பாக வெள்ளப்பெருக்கின் போது தொங்கும் பாலத்தில் ஏற்பட்ட சேதங்களை பல மாதங்களாக சீரமைக்காத நிலையில் பணிகள் முடிவு பெற்று பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.


தினம்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் இந்த நிலையில் இன்று முதல் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டதை எடுத்து ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் வந்து செல்கின்றனர். ஒகேனக்கலில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சாந்தி, நாடாளுமன்ற உறுப்பினர் மணி, சட்டமன்ற உறுப்பினர் ஜிகே மணி, சுற்றுலாத்துறை அலுவலர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜி கே மணி தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் அ.மணி மற்றும் கட்சித் தொண்டர்கள் பொதுமக்கள் சுற்றுலா பயணிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


சுற்றுலா தளங்களில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் மீண்டும் துணிப்பை பயன்படுத்தும் நோக்கில்  பத்து ரூபாய் செலுத்தி துணிப்பை வழங்கும் இயந்திரத்தை மாவட்ட ஆட்சியர்  சாந்தி தொடங்கி வைத்தார்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad