ஸ்ரீவித்யா மந்திர் மெட்ரிக் பள்ளி கூட்டரங்கில் தூய்மை கணக்கெடுப்பு பரப்புரையாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கான ஒருநாள் பயிற்சி முகாம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 13 நவம்பர், 2024

ஸ்ரீவித்யா மந்திர் மெட்ரிக் பள்ளி கூட்டரங்கில் தூய்மை கணக்கெடுப்பு பரப்புரையாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கான ஒருநாள் பயிற்சி முகாம்.

தர்மபுரிமாவட்டம், பாலக்கோடு ஸ்ரீவித்யா மந்திர் மெட்ரிக் பள்ளி கூட்டரங்கில் தூய்மை கணக்கெடுப்பு பரப்புரையாளர் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கான ஒருநாள் பயிற்சி முகாம் நவம்பர் 13ம் தேதி இன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைப்பெற்றது.


இம்முகாமிற்க்கு பேரூராட்சி தலைவர் பி.கே.முரளி தலைமை வகித்து குத்துவிளக்கு ஏற்றி பயிற்சி முகாமினை தொடங்கி வைத்தார். பேரூராட்சிகள் உதவி இயக்குநர் கணேசன், செயல் அலுவலர் டார்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இம்முகாமில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் தூய்மை பணிகள் குறித்தும், வீடுகளில் இருந்து குப்பைகளை தரம் பிரித்து வாங்குதல், கழிவு நீர் தூய்மை, திடக்கழிவு மேலாண்மை, கசடு கழிவு நீர் மேலாண்மை, பொது கழிப்பறைகள் தூய்மை, திறந்த வெளி மலம் கழிப்பு இல்லாத பேரூராட்சி என சான்று பெறுதல் மற்றும் பொது மக்களிடையே சுற்றுப்புற சுகாதார தூய்மை குறித்து விழிப்புணர்வு செய்தல் ஆகியன குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.


இதில் தூய்மை இந்தியா திட்ட முதன்மை பயிற்சியாளர் ரவீந்திரன் கலந்து கொண்டு பயிற்சி அளித்தார். இப்பயிற்சி முகாமில் பாலக்கோடு, காரிமங்கலம், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, பென்னாகரம், பாப்பாரப்பட்டி, மாரண்டஅள்ளி, கம்பைநல்லூர், காவேரிபட்டணம், கெலமங்கலம், தேன்கனிகோட்டை, பர்கூர், ஊத்தங்கரை உள்ளிட்ட 16 பேரூராட்சிகளை சேர்ந்த பரப்புரையாளர்கள்  மற்றும் மேற்பார்வையாளர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad