மை தருமபுரி அமைப்பின் சார்பில் மாணவர்களுக்கு மேலங்கி வழங்கப்பட்டது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 4 நவம்பர், 2024

மை தருமபுரி அமைப்பின் சார்பில் மாணவர்களுக்கு மேலங்கி வழங்கப்பட்டது.


 தருமபுரி மாவட்டம் அலக்கட்டு, ஏரிமலை மலை கிராமத்தின் எண்ணங்களின் சங்கமம் மகாத்மா காந்தி மாலை நேர வகுப்பு மாணவர்களுக்கு மை தருமபுரி அமைப்பின் சார்பாக மேலங்கி வழங்கப்பட்டது.

இது குறித்து அந்த அமையின் தலைவர் சதீஷ்குமார் கூறுகையில், மை தருமபுரி அமைப்பின் சார்பாக மலை கிராம பள்ளி மாணவர்களுக்கு மேலங்கி மற்றும் கல்வி உபகரணங்கள் கடந்த மூன்றாண்டுகளாக வழங்கி வருகிறோம். கிராமப்புற பள்ளி மாணவர்களின் கல்வி வளர்ச்சி மேலும் ஊக்குவிக்க அவர்களுக்கு தேவையான கல்வி உதவிகளை செய்து வருகிறோம். தமிழகம் முழுவதும் உள்ள எண்ணங்களின் சங்கமம் அமைப்பின் சார்பாக மகாத்மா காந்தி மாலை நேர வகுப்புகள் நம் தருமபுரி மாவட்டத்தில் உள்ள மலைப்பகுதிகளில் பதினொன்று இடங்களில் நடைபெற்று வருகிறது. 


தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே அலக்கட்டு மலை, எரிமலை கிராமத்தில் உள்ள 60 மாணவர்களுக்கு மேலங்கி மை தருமபுரி அமைப்பின் சார்பாக வழங்கப்பட்டது. இந்த நிகழ்விற்கு எண்ணங்களின் சங்கமம் தலைவர் பிரபாகரன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ், திட்ட இயக்குனர் சதீஸ், ஆனந்த், மை தருமபுரி அமைப்பின் நிறுவனர் சதீஸ் குமார் ராஜா, செயலாளர் தமிழ்செல்வன், ஒருங்கிணைப்பாளர்கள் அருணாசலம், அருள்மணி, ஜெய் சூர்யா, நித்யா ஆகியோர் மாணவர்களை ஒருங்கிணைத்து மேலங்கியை வழங்கினர். இதற்கு துணையாக இருந்த பொம்மிடி எஸ்.எஸ் அப்பரேல்ஸ் நிறுவனத்திற்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம், என அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad