தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டார வளர்ச்சி அலுவலக கூட்டரங்கில் ஒன்றிய கவுன்சிலர் ஆலோசனைக் கூட்டம் ஒன்றிய குழு தலைவர் பாஞ்சாலை கோபால் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்க்கு துணைத் தலைவர் பிரபாகரன் முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற வரவு செலவு கணக்குகளை அதிகாரிகள் எடுத்துரைத்தனர்.
. 

அதனை தொர்ந்து நடைப்பெற்ற கூட்டத்தில் கிராமங்களுக்கு தேவையான குடிநீர், மின்விளக்கு, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நிறைவேற்றுதல், மழைக்காலங்களில் பரவும் நோய்களிலிருந்து பொது மக்களை காக்கும் வகையில் கிராமங்கள் தோறும் மருத்துவ முகாம்கள் நடத்துவது, பழுதான அங்கன்வாடி மைய கட்டிடங்களை கண்டறிந்து சீரமைப்பது உள்ளிட்டவைகள் குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இக்கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரேணுகா, மீனா, உதவி பொறியாளர் தமிழ்மணி, திவ்யா, ஒன்றிய கவுன்சிலர்கள் அழகு சிங்கம், முத்துசாமி, முத்தப்பன், லதா ராஜாமணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக