பாலக்கோடு எம்.ஜி.ரோட்டில் உள்ள மயூரா கூட்டரங்கில் திமுக வாக்குசாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 9 நவம்பர், 2024

பாலக்கோடு எம்.ஜி.ரோட்டில் உள்ள மயூரா கூட்டரங்கில் திமுக வாக்குசாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டம்.

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு திமுக பேரூர் கழகம் சார்பில் பாலக்கோடு எம்.ஜி‌.ரோட்டில் உள்ள மயூரா கூட்டரங்கில் வாக்குசாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் பேரூர் செயலாளர், பேரூராட்சி தலைவர் பி.கே.முரளி தலைமையில் நடைப்பெற்றது.


இக்கூட்டத்திற்க்கு அக்கட்சியின் மாவட்ட பொருளாளர் முருகன், பகுதி அவைத் தலைவர் அமானுல்லா,  ஒன்றிய துணை செயலாளர் ரவி, பகுதி துணை செயலாளர்கள் பாபு, மாதேஷ், மாவட்ட பிரதிநிதி மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பாலக்கோடு சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் அரியப்பன் கலந்து கொண்டு வாக்குசாவடி முகவர்களிடையே பேசும் போது வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் திமுக ஆட்சி அமைப்பதே லட்சியமாக கொண்டு தொண்டர்கள் பணியாற்ற வேண்டும், நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தொண்டர்கள் கடுமையாக உழைத்து  40 திற்க்கு 40 தொகுதிகளை வெற்றியடைய செய்ததை போன்று, வரும் சட்டமன்ற தேர்தல் வெற்றிக்காக அயராது பாடுபட வேண்டும்.


மேலும் வரும் 16, 17, 23 மற்றும் 24ம் தேதிகளில் நடைபெறும் புதிய வாக்காளர் பட்டியல் பெயர் சேர்க்கும் முகாமில் 18 வயது பூர்த்தியடைந்தவர்களை வாக்காளர் பட்டியலில் இணைத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள ஆலோசனை வழங்கினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட மீனவர் அணி துணை அமைப்பாளர் குமரன், மாவட்ட தகவல்  தொழில்நுட்ப துணை அமைப்பாளர் ஆனந்த், தகவல் தொழில்நுட்ப தொகுதி பொறுப்பாளர் லேகேஸ்வரி,  ஒன்றிய பிரதிநிதிகள் பெரியசாமி, வகாப் ஜான், இலியாஸ், ஏஜாஸ், பொருளாளர் துரை, வார்டு கவுன்சிலர்கள் மற்றும் கிளை செயலாளர்கள், மாவட்ட சார்பு அணி அமைப்பாளர்கள், நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள் திரளாக  கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad