தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு எம்.ஜிரோட்டில் உள்ள கூட்டரங்கில் திமுக செயல்வீரர்கள் பொது உறுப்பினர் கூட்டம் பாலக்கோடு பேரூராட்சி தலைவர், பேரூர் செயலாளர் பி.கே.முரளி தலைமையில் நடைப்பெற்றது. இக்கூட்டத்திற்கு ஒன்றியதுணை செயலாளர் பி.எல்.ரவி, பேரூர் அவைத் தலைவர் அமானுல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்தில் பாலக்கோடு சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் அரியப்பன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். இக்கூட்டத்த்தில் தமிழக துணை முதல்வராக பொறுப்பேற்ற பிறகு வரும் டிசம்பர் 5மற்றும் 6ம் தேதி, தர்மபுரி மாவட்டத்திற்க்கு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை தரும் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேரூராட்சி கவுன்சிலர்கள், வார்டு செயலாளர்கள், மாவட்ட, ஒன்றிய, கிளை நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக