7ஆண்டுகளுக்கு முன் இடிக்கப்பட்ட பேருந்து நிறுத்தத்தை மீண்டும் கொண்டுவர ஆட்சியரிடம் மனு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 4 நவம்பர், 2024

7ஆண்டுகளுக்கு முன் இடிக்கப்பட்ட பேருந்து நிறுத்தத்தை மீண்டும் கொண்டுவர ஆட்சியரிடம் மனு.


தர்மபுரி ஆட்சியர் அலுவலகத்தில் பச்சினம்பட்டியை சேர்ந்த கிராம பேரூந்து நிறுத்தம் வேண்டி கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.


தருமபுரி மாவட்டம் தருமபுரி வட்டம் பச்சினம்பட்டியை சேர்ந்த கிராம பேரூந்து நிறுத்தம் வேண்டி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம்  அளித்த மனுவில் கூறியிருப்பதாவது, நாங்கள் பச்சினம்பட்டி கிராமத்தை சார்ந்தவர்கள் எங்கள் ஊரில் இருந்த பேருந்து நிறுத்தத்தை சாலை விரிவாக்கம் செய்தபொழுது இடிக்கப்பட்டது, கடந்த ஏழு வருடங்களாக பேருந்து நிறுத்தம் இல்லாமல் கல்லூரி மாணவர்கள் மற்றும் பொது மக்கள் வெயிலிலும் மழையிலும் பேருந்துக்காக காத்து நிற்கும் அவலநிலை உள்ளது.


எனவே பச்சினம்பட்டி  கிராமத்திற்கு பேரூந்து நிறுத்தம் கட்டித்தர வேண்டுகிறோம் என அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad