அடிப்படை வசதிகள் வேண்டி ஆதார் அட்டை, குடும்ப அட்டையை ஆட்சியரிடம் ஒப்படைக்க வந்த மலை கிராம மக்கள். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 4 நவம்பர், 2024

அடிப்படை வசதிகள் வேண்டி ஆதார் அட்டை, குடும்ப அட்டையை ஆட்சியரிடம் ஒப்படைக்க வந்த மலை கிராம மக்கள்.


பென்னராகம் அடுத்த கோட்டூர் மலை கிராம மக்கள் சாலை வேண்டி ஆதார் குடும்ப அட்டை வாக்காளர் அட்டைகளுடன் ஆட்சியர் அலுவலகத்தில் மனுக்கொடுக்க வந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். 


தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த வட்டவனஹள்ளி ஊராட்சி கோட்டூர் மலை கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். முழுவதுமாக மலையில் இருப்பதால் முறையான சாலைவசதி இல்லாமல், அத்தியாவசிய தேவைகளுக்கு கழுதை மூலம் பொருட்கள் எடுத்துச் செல்லப்படுகிறது. மேலும் அரசு பள்ளிக்கு ஆசிரியர்கள் வருவதில்லை சாலை வசதி இல்லாததால் மேற்படிப்புக்கு மலை கிராமத்தில் இருந்து பிள்ளைகள் செல்ல முடியாமல் நின்று விடுகின்றனர். 


வனப்பகுதியில் இருப்பதால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சாலை அமைக்க வனத்துறையிடம் அனுமதி பெறப்பட்டது. ஆனால் இதுவரை சாலை வசதி ஏற்படுத்தி தரவில்லை. இதனால் மலை கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் சாலை வசதி கேட்டு ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை உள்ளிட்ட அரசு ஆவணங்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்து மனு கொடுக்க வந்திருந்தனர். 


அப்பொழுது காவல் துறையினர், 5 பேர் மட்டுமே உள்ளே செல்ல வேண்டும் என தெரிவித்தனர். ஆனால் எல்லோரையும் விட வேண்டுன் என மலை கிராம மக்கள் தெரிவித்து, வாக்குவாதம் செய்து, நுழைவாயில் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து 10 பேர் மட்டும் உள்ளே ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.  


மனுவை பெற்றுக்கொண்டு சாலை அமைக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் கி.சாந்தி உறுதி அளித்தார். ஆனால் சாலை வசதி ஏற்படுத்தி தராவிட்டால் அரசு ஆவணங்களை ஒப்படைத்துவிட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad