திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளைஞர் அணி தலைவரும் தமிழக துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் அவர்களின் 47-வது பிறந்த நாளை முன்னிட்டு B. பள்ளிப்பட்டியில் திமுக கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.
இதில் திமுக ஒன்றிய செயலாளர் பி.எஸ்.சரவணன், மேற்கு ஒன்றிய இளைஞர் அணி பொறுப்பாளர்கள் தினேஷ், தமிழ்நெஞ்சன் ஏற்பாட்டில் B.பள்ளிப்பட்டி தூயமரியாள் தொடக்கப் பள்ளியில் மாணவர்களுக்கு இனிப்பு மற்றும் இலவச நோட்டு புத்தகம் பேனா பென்சில் போன்ற உபகரணங்களை வழங்கினார்கள், இதில் ஊராட்சி மன்ற தலைவர் திருமலா தினேஷ், பைரநத்தம் ஊராட்சி மன்ற தலைவர் சாந்தா குப்புசாமி, துரிஞ்சிப்பட்டி கவுன்சிலர் ராஜேஷ், திமுக கிளை செயலாளர்கள் ரவி, சுதந்திரம், தீர்த்தகிரி, ராஜேந்திரன், ஜனா, திவாகர், மகேந்திரன், ஸ்டாலின் மணிக்குமார், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பொன்மணி, துணை ஒன்றிய செயலாளர் செரிஃபா மற்றும் திரளான திமுக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக