பாப்பாரப்பட்டி புதிய பஸ் நிலையம் அருகில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவில் நலத்திட்ட உதவிகள் திமுக நகர செயலாளர் வழங்கினார்!. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 27 நவம்பர், 2024

பாப்பாரப்பட்டி புதிய பஸ் நிலையம் அருகில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவில் நலத்திட்ட உதவிகள் திமுக நகர செயலாளர் வழங்கினார்!.


பாப்பாரப்பட்டி புதிய பஸ் நிலையம் அருகில் திமுக சார்பில் நடைபெற்ற தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 48-வது பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. விழாவுக்கு நகர அவை தலைவர் மற்றும் பேரூராட்சி மன்ற உறுப்பினர் விஜய் ஆனந்த் தலைமை வகித்தார். பேரூராட்சி தலைவர் பிருந்தா, துணைத் தலைவர் மல்லிகா, மாவட்ட பிரதிநிதி குமரன், நகர துணை செயலாளர் சுரேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் இனிப்புகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. 


நெல் அறுக்கும் இயந்திரத்தில் விபத்துக்குள்ளான கழக உறுப்பினரின் மகனுக்கு மருத்துவ சிகிச்சைக்காக ரூ 17,000 நிவாரண நிதியை நகர செயலாளர் சண்முகம் வழங்கினார். பேரூராட்சி கவுன்சிலர்கள் தர்மலிங்கம், தமிழ்ச்செல்வன், தமிழ்செல்வி முனுசாமி, பென்னாகரம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி  அமைப்பாளர் முனியப்பன், மகளிர் அணி மல்லிகா ராஜி, ஒன்றிய பிரதிநிதிகள் ரவிக்குமார், வெங்கடேசன், நகர துணை செயலாளர் பொன்னுசாமி, வார்டு செயலாளர்கள் தனசேகரன், பூபால், நிர்வாகிகள் மாதேஷ் கௌரப்பன், சுன்னா பாய் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


இதேபோல் மாதேஅள்ளியில் மாவட்ட பிரதிநிதி சிவக்குமார் தலைமையில் நடைபெற்ற உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழாவில் 100 நாள் வேலைத்திட்ட தொழிலாளர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. ஒன்றிய துணைச் செயலாளர் கல்பனா மாதேஷ், மாவட்ட பிரதிநிதிகள் பெரியசாமி, முனியப்பன், நிர்வாகிகள் கோல்கார சின்னசாமி, முனுசாமி மற்றும் கட்சியினர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad