நிகழ்ச்சிக்கு திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் ஏ.கே.கருணாநிதி, பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் ராஜா, கிளை செயலாளர் சின்னசாமி, மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் முத்தமிழ், ஒன்றிய அவைத்தலைவர் சிவராஜ், மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் சாமராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியில் மாநில விவசாய அணி துனைத்தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பி.என்.பி. இன்பசேகரன், பள்ளி மாணவர்களுக்கு, நோட்டு புத்தகங்கள், எழுதுபொருள்கள் வழங்கி, மாணவர்கள் நன்றாக படித்து அரசு பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசு வழங்கும் சலுகைகளை பயன்படுத்தி கல்வியில் முன்னேற வேண்டும் என கேட்டுக் கொண்டு மாணவர்களுக்கு இனிப்புக்கனை வழங்கி பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டார். அதனை தொடர்ந்து செக்கோடி பகுதியில் செயல்பட்டு வரும், ஆதரவற்ற முதியோர் மறுவாழ்வு இல்லத்தில் முதியோர்களுக்கு வேட்டி, சேலை மற்றும் அசைவ உணவுகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர் முத்தப்பன், மாவட்ட பிரதிநிதி சக்திவேல், ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் சகாதேவன், ஆசைத்தம்பி, திலிபன் குமார், சிவா, சிலம்பு, சபரி, சிவராஜ், விக்னேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட இளைஞர் அணி துணை அமைபபாளர் செல்வராஜ் செய்திருந்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக