தமிழக விவசாயிகளின் சங்கம் தர்மபுரி மாவட்ட விவசாயிகள் தண்ணீர் உரிமை கோரி மாநாடு - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 3 நவம்பர், 2024

தமிழக விவசாயிகளின் சங்கம் தர்மபுரி மாவட்ட விவசாயிகள் தண்ணீர் உரிமை கோரி மாநாடு


தர்மபுரி வன்னியர் திருமண மண்டபத்தில் தமிழக விவசாயிகளின் தர்மபுரி மாவட்ட விவசாயிகள தண்ணீரை உரிமை கோரி மாநாடு கரைபுரண்டு ஓடுது காவிரி ஆறு கண்ணீரில் தவிக்குது தர்மபுரி நாடு என்று தர்மபுரி வன்னியர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. 


கோட்டத்திற்கு தலைவர் எஸ் ஏ சின்னசாமி தலைமை வைத்தார் முன்னிலை மாவட்ட செயலாளர் சக்திவேல். குப்புசாமி. மாவட்ட பொருளாளர் பழனி மாவட்ட துணை தலைவர் அண்ணாமலை. சிறப்பு அழைப்பாளர்கள் மாநில பொதுச் செயலாளர் சுந்தரம் மாநில பொருளாளர் பாண்டியன் மாநில கவுரவத் தலைவர் வெங்கடாசலம ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்.


கோரிக்கைகள்:

தருமபுரி மாவட்டம் தொடர் வறட்சியால் பாதிக்கபட்டு விவசாயிகள் பிழைப்பு தேடி அண்டை மாவட்டங்கள், அண்டை மாநிலங்களுக்கு செல்லும் அவலநிலை நீடிக்கின்றது. இந்த மாவட்டத்தை ஒட்டி ஓடும் காவிரியும், தென்பெண்ணை ஆறும் மழைக் காலங்களில் வெள்ளமாக சென்று கடலில் கலக்கும் அவலம் நீடிக்கின்றது.


2020-ல் அறிவிக்கப்பட்ட எண்ணேகோல்புதூர் தடுப்பணையிலிருந்து தும்பல அள்ளி அணைக்கு கால்வாய்த்திட்டம், அலியாளம் தூள்செட்டி ஏரி கால்வாய் திட்டம், புலிக்கரை ஏரிக்கு தண்ணீர் கொண்டுவரும் திட்டம் செயல்படுத்துவதில் ஆமைவேகம் காட்டி வருகின்றது தமிழக அரசு, கடந்த பத்தாண்டு காலமாக காவிரி ஒகேனக்கல்லில் உபரியாக செல்லும் தண்ணீரை மோட்டார் பம்ப் மூலம் (நீரேற்றும் திட்டம்) தருமபுரி மாவட்ட அனைத்து ஏரிகளுக்கும் தண்ணீர் நிரப்பும் திட்டம் தமிழக விவசாயிகள் சங்கம், அரசியல்கட்சிகள், பல்வேறு அமைப்புகள் மூலம் கோரிக்கை வைத்தும், வலியுறுத்தப்பட்டும் தருமபுரி மாவட்ட விவசாயிகளுக்கு ஏமாற்றமே இதுவரை பரிசளிக்கப்பட்டு வருகின்றது. தருமபுரி மாவட்டம் ஈச்சம்பாடி அணையிலிருந்து நீரேற்றி மொரப்பூர், கடத்தூர், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியங்களை சார்ந்த 38 ஏரிகளுக்கு தண்ணீர் நிரப்பும் திட்டம் அரசானை பிறப்பிக்கப்பட்டும் நிதி ஒதுக்கீடு செய்யப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.


நல்லம்பள்ளி ஒன்றியம் பாளையம் கோம்பை மாரியம்மன் கோயில் அணைத்திட்டம் மறைந்த தமிழக அமைச்சர் மாண்புமிகு கக்கன் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டு ஆண்டுகள் பல ஆகியும் முழுமையடையாமல் வறட்சியில் இப்பகுதி பாதிக்கப்பட்டுள்ளது.


ஏரிகள் தூர்வாரப்பட்டு தண்ணீர் தேங்கி நிலத்தடி நீர் உயர வழி வகுக்கும் குடிமராமத்து திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. பஞ்சப்பள்ளி சின்னாற்றில் இருந்து உபரியாக காவிரியில் கலக்கும் உபரி நீரை தொள்ளைக்காது நீர்தேக்கத்தில் விட்டு விவசாயத்திற்கு தண்ணீர் வழங்க வேண்டும்.


தருமபுரி நகரின் வழியாக கம்பைநல்லூர் தென்பெண்ணை ஆற்றில் கலக்கும் சனத்குமார் நதி புதர்மண்டி ஆற்றின் அடையாளம் இழந்து சாக்கடை ஆறாக காட்சி அளிக்கின்றது. ஆற்றை தூர்வாரி புனரமைக்க சுமார் ரூ. 50 கோடியில் மதிப்பீடு செய்யப்பட்ட திட்டம் செயல்படுத்தப்படாமல் உள்ளது. 


அனுமன் தீர்த்தம் அருகே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே 2019ல் அறிவிக்கப்பட்ட குமரன் அணைக்கட்டு திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. காவிரி உபநீர் திட்டத்தை செயல்படுத்தி அனைத்து ஏரிகளுக்கு நீர் கொண்டு வர வேண்டும் என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

கருத்துகள் இல்லை:

Post Top Ad