பாலக்கோடு பேருந்து நிலையம் முன்பு வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த தர்மபுரி MP ஆ.மணி. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 16 நவம்பர், 2024

பாலக்கோடு பேருந்து நிலையம் முன்பு வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த தர்மபுரி MP ஆ.மணி.

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு பேரூர் கழகம் சார்பில் பாலக்கோடு பேரூராட்சிக்குட்பட்ட 18வார்டுகளை சேர்ந்த வாக்காளர்களுக்கு தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர்  வக்கில் ஆ.மணி அவர்கள், நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி பாலக்கோடு பேருந்து நிலையம் முன்பு  மாவட்டசெயலாளர், முன்னாள் அமைச்சர் பி.பழனியப்பன் அவர்களின்  தலைமையில் நவம்பர் 15, வெள்ளிக்கிழமை மதியம் 12 மணிக்கு  நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பாலக்கோடு பேரூர் கழக செயலாளர், பேரூராட்சி தலைவர் பி.கே.முரளி அவர்கள் முன்னிலை வகித்தார். நடந்த முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றதையடுத்து, உதய சூரியன் சின்னத்தில் தனக்கு வாக்களித்து, வெற்றி பெற செய்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து  பேசுகையில், கட்சி பேதமின்றி அணைத்து தரப்பு மக்களின் பிரதிநிதியாக செயல்படுவேன் எனவும், பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மனுவாக வழங்கினால் அதனை நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுப்பேன்என்றும், ஏழை எளிய மக்களின் தொண்டனாக செயல்படுவேன், தர்மபுரி மாவட்டத்திற்க்கு ஒன்றிய  அரசின் பல்வேறு மக்கள் நல  திட்டங்களை செயல்படுத்த தொடர்ந்து பாடுபடுவேன் என தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள், கிளை செயலாளர்கள், தொண்டர்கள், பொதுமக்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad