பாலக்கோடு மத்திய ஒன்றிய திமுக சார்பில் கிராமம், கிராமமாக சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.மணி. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 16 நவம்பர், 2024

பாலக்கோடு மத்திய ஒன்றிய திமுக சார்பில் கிராமம், கிராமமாக சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.மணி.

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு மத்திய  ஒன்றியத்துக்குட்பட்ட, கரகதஅள்ளி ஊராட்சி, பேளார அள்ளி ஊராட்சி, ஜெர்த்தலாவ் ஊராட்சி, எர்ரண அள்ளி ஊராட்சி, பி.செட்டி அள்ளி ஊராட்சி, நல்லூர் ஊராட்சி, கணபதி ஊராட்சி அ.மல்லாபுரம் ஊராட்சி உள்ளிட்ட  20க்கும் மேற்பட்ட கிராமங்களில்  வாக்காளர்களுக்கு தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் வக்கில் ஆ.மணி நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி பாலக்கோடு மத்திய ஒன்றிய செயலாளர்  முனியப்பன் தலைமையில் நடைப்பெற்றது.


இந்நிகழ்ச்சியில் தர்மபுரி மேற்கு மாவட்ட செயலாளர்,முன்னாள் அமைச்சர் பழனியப்பன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். மேலும் இந்நிகழ்ச்சியில்  முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாசலம், ஒன்றிய செயலாளர்கள் வழக்கறிஞர் கோபால்,  பஞ்சப்பள்ளி அன்பழகன், இல கிருஷ்ணன், மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் சந்திரசேகர், ஒன்றிய அவைத் தலைவர் இராஜாமணி, ஒன்றிய துணைச் செயலாளர் ரவி, அற்புதம் செந்தில், பொருளாளர் குமார், கவுன்சிலர் அழகு சிங்கம்,முத்துசாமி,நாகராஜ், ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்தன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றதையடுத்து, தமக்கு வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து பேசுகையில், விடுபட்ட அனைவருக்கும் மகளிர் உரிமை தொகை கிடைக்க வழிவகை செய்யப்படும் எனவும், வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாகவே தூள்செட்டி ஏரிகால்வாய் பணிகள் நிறைவேற்றப்படும் எனவும், தமிழக அரசின் மக்கள் நல திட்டங்கள் அனைத்தும் அனைத்து தரப்பு மக்களையும் சென்றடைந்து வருவதாக தெரிவித்தவர்.


தர்மபுரி மாவட்டத்தை முன்னேற்றும் வரையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தி வருவதாக தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் ஒன்றிய கழக நிர்வாகிகள், மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் கிளை கழக செயலாளர்கள், கட்சி உறுப்பினர்கள்  பொதுமக்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad