அதில், தற்பொழுது நமது மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை மற்றும் புயல் காரணமாக கன மழை பெய்து வருவதால் பொதுமக்கள் நீர்நிலைகள் அருகில் குழந்தைகளை அனுமதிக்க கூடாது எனவும் மேலும் அறுந்து விழுந்துள்ள மின் கம்பிகளை தொட வேண்டாம் எனவும் மின்சாரம் தொடர்பான சாதனங்களை பயன்படுத்தும் போது கவனமாக இருக்கவும் மேலும் மழையின் காரணமாக பாதிப்புகள் இருப்பின் அதன் விவரத்தினை மாவட்ட கட்டுப்பாட்டு அறை எண் 1077 என்ற எண்ணுக்கு தெரிவிக்கலாம்.
அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் கட்டுப்பாட்டறை செயல்பட்டு வருவதால் பொதுமக்கள் தங்கள் குறைகளை தெரிவிக்கலாம் எனவும் நாளையும் நமது மாவட்டத்திற்கு கனமழை எதிர்பார்க்கப்படுவதால் விடுமுறை தினம் என்பதாலும் அத்தியாவசிய பணிகள் தவிர வேறு காரணங்களுக்காக வெளியில் செல்வதை தவிர்க்கவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள், என மாவட்ட ஆட்சியர் திருமதி. சாந்தி அவர்கள் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக