மறுவாழ்வு விடுதி / மையங்களுக்கு மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 4 நவம்பர், 2024

மறுவாழ்வு விடுதி / மையங்களுக்கு மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை.


தருமபுரி மாவட்டம் முழுவதும் செயல்படும் மறுவாழ்வு இல்லங்கள் அரசு விதிமுறைப்படிபதிவு செய்யப்பட்டு செயல்பட வேண்டும். செய்யப்பட்டு செயல்பட வேண்டும் தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. கி.சாந்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல் அவர்கள் தகவல்.


இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது: தருமபுரி மாவட்டம் உள்ள முழுவதும் குழந்தைகள் இல்லங்கள், முதியோர் இல்லங்கள் மனவளர்ச்சி குன்றியவர்களுக்கான இல்லங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான இல்லங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பள்ளிகள், போதை பொருட்களுக்கு அடிமையானவர்களுக்கான மறுவாழ்வு இல்லங்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான விடுதிகள் மற்றும் மன நலம் பாதிக்கப்பட்டோருக்கான இல்லங்கள் ஆகியவை செயல்பட்டு வருகின்றன். 


இத்தகைய இல்லங்கள் அனைத்தும் பின்வரும் பதிவு மற்றும் உரிமம் பெறுவதற்கான சட்டங்களின்படி பதிவு செய்யப்பட்டு செயல்பட வேண்டும். 

1. இளைஞர் (நீதி பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம், 2015 ன் படி, குழந்தைகள் இல்லங்கள், 

2. மூத்த குடிமக்களுக்கான சட்டம், 2007 ன்படி, முதியோர் இல்லங்கள், 

3. மாற்றுத்திறனாளிகள் நலச்சட்டம் 2016 ன்படி, மாற்றுத்திறனாளிகள் (ம) மனவளர்ச்சி குன்றியோருக்கான இல்லங்கள், சிறப்பு பள்ளிகள், 

4. மன நல பாதுகாப்புச் சட்டம் - 2017 ன்படி, மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான இல்லங்கள் (ம) போதை பொருட்களுக்கு அடிமையானவர்களுக்கான மறுவாழ்வு இல்லங்கள், 

5. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான விடுதிகள் மற்றும் இல்லங்களுக்கான (ஒழுங்கு முறை) சட்டம் - 2014 ன்படி, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான விடுதிகளை இச்சட்டங்களின் படி பதிவுகள் செய்யப்படவேண்டும்.


அவ்வாறு பதிவு பெறாமல் மாவட்டத்தில் செயல்படும் குழந்தைகள், பெண்கள், முதியோர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், மனவளர்ச்சி குன்றியோர்கள் மாற்றுத்திறனாளிகள், போதை பொருட்களுக்கு அடிமையானவர்களுக்கான மறுவாழ்வு இல்லங்கள் மற்றும் விடுதிகள் ஆகியவை உரிய முறையில் கீழ் இணையதளத்தில் / அலுவலகத்தில் பதிவு செய்ய விண்ணப்பிக்க ஒரு மாத காலம் அவகாசம் வழங்கப்படுகிறது.


இதன்படி, பதிவு செய்யப்படாமல் இயங்கும் அனைத்து இல்லங்கள் மற்றும் விடுதிகள் உடனடியாக குறிப்பிட்ட உரிய துறையினை அனுகி இணையத்தளம் (Portal) (அ) துறை வாயிலாக ஒரு மாத காலத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றது. அவ்வாறு ஒரு மாத காலத்திற்குள் விண்ணப்பிக்க தவறும்பட்சத்தில், உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, இவ்வில்லங்களுக்கு சீல் வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. என மாவட்ட மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி,இ.ஆ.ப., அவர்கள் தனது செய்தியறிக்கையில் தெரிவித்துள்ளார். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad