பாப்பாரப்பட்டி பேரூராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 28 நவம்பர், 2024

பாப்பாரப்பட்டி பேரூராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு.


தருமபுரி மாவட்டம், பென்னாகரம் ஊராட்சி ஒன்றியம் மற்றும் பாப்பாரப்பட்டி பேரூராட்சி பகுதிகளில் ரூ.125.17 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.


தருமபுரி மாவட்டம், பென்னாகரம் ஊராட்சி ஒன்றியம் மற்றும் பாப்பாரப்பட்டி பேரூராட்சி பகுதிகளில் ரூ.125.17 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் இன்று (28.11.2024) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.


தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், எர்ரனஅள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மதிய உணவு திட்டத்தின் கீழ் மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவின் தரம் குறித்தும், பென்னாகரம் வட்டம், பாப்பாரப்பட்டி பேரூராட்சியில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டம் 2022-2023 - கீழ் ரூ.2.74 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் வாரச் சந்தை கட்டுமான பணிகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி,இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.


மேலும், பென்னாகரம் ஊராட்சி ஒன்றியம், பிக்கிலி ஊராட்சி, பெரியூர் கிராமத்தில் PM JANMAN (PMAY-G) திட்டத்தின் கீழ் ரூ. 5.73 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் 9 புதிய வீடுகளின் கட்டுமான பணிகளையும், பிக்கிலி ஊராட்சி, மேட்டுகொட்டாயில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.17.46 இலட்சம் மதிப்பீட்டில் புதிய குளம் அமைக்கும் பணிகளையும், பிக்கிலி ஊராட்சி, கொல்லப்பட்டி கிராமத்தில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ரூ.3.50 இலட்சம் மதிப்பீட்டில் புதிய வீடு கட்டப்பட்டு வரும் கட்டுமான பணிகளையும், பிக்கிலி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.8.83 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் பட்டு வளர்ச்சி குடில் கட்டுமான பணிகளையும், சீழுத்து கொட்டாய் கிராமத்தில் பழங்குடியினர் / இருளர் வீடுகள் திட்டத்தின் கீழ் ரூ.5.20 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் 17 வீடுகள் கட்டுமான பணிகளையும், பிக்கிலி ஊராட்சி, புதுக்கரம்பு கிராமத்தில் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.76.00 இலட்சம் மதிப்பீட்டில் பிக்கிலி சாலை முதல் பனங்காடு வரை நடைபெற்று வரும் சாலை பணிகளையும், பிக்கிலி ஊராட்சியில் கிராமப்புற வீடுகள் பழுது நீக்கம் செய்தல் திட்டத்தின் கீழ் ரூ.1.45 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் கட்டுமான பணிகளையும், புதுக்கரம்பு கிராமத்தில் பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 7.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் பல்நோக்கு மையம் கட்டுமான பணிகள் என மொத்தம் ரூ.125.17 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி,இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை தரமாகவும், குறிப்பிட்ட காலஅளவிற்குள் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்கள்.


இதனைத்தொடர்ந்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தலைமையில் இன்று (28.11.2024) நடைபெற்றது. இக்கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திரு.கௌரவ்குமார், இ.ஆ.ப., ஊரக வளர்ச்சி செயற்பெறியாளர் திரு.பாலமுருகன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த ஆய்வுகளின் போது, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு.சுருளிநாதன், திருமதி.ஷகிலா, வட்டாட்சியர் திருமதி.லட்சுமி உட்பட தொடர்புடைய அலுவலர்கள் உள்ளனர். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad