தமிழ்நாடு மாணவர்கள் கண்டுபிடிப்பாளர்கள் திட்டம்; மாணவர்களை பாராட்டிய மாவட்ட ஆட்சியர். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 30 நவம்பர், 2024

தமிழ்நாடு மாணவர்கள் கண்டுபிடிப்பாளர்கள் திட்டம்; மாணவர்களை பாராட்டிய மாவட்ட ஆட்சியர்.


தமிழக அரசின் புத்தாக்கம் மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தமிழ்நாடு மாணவர்கள் கண்டுபிடிப்பாளர்கள் திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பென்னாகரம், இளநிலை வணிகவியல் மூன்றாம் ஆண்டு பயிலும் மாணவர்கள் கலந்துகொண்டு தங்களது படைப்புகளின் சிறப்புகளை எடுத்துரைத்து, மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்த ஒரே அரசு கலைக்கல்லூரி என்ற பெருமையினைப் பெற்றுத் தந்துள்ளனர். 


கல்லூரிக்கு பெருமை சேர்த்திட்ட மாணவர்களை மாவட்ட ஆட்சியர் திருமதி சாந்தி அவர்கள் சான்றிதழ் மற்றும் 25 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை வழங்கி பாராட்டினார். இந்நிகழ்வில் முனைவர் ஜா.பாக்கியமணி, முதல்வர், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி பென்னாகரம், முனைவர் கோ.வெங்கடாசலம் உதவி பேராசிரியர், வணிகவியல் துறை, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகியோர் உடன் இருந்தனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad