இதில் பாலக்கோடு சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் அரியப்பன் கலந்து கொண்டு வாக்குசாவடி முகவர்களிடையே பேசும் போது வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் திமுக கழக ஆட்சி அமைப்பதே லட்சியமாக கொண்டு தொண்டர்கள் பணியாற்ற வேண்டும், நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தொண்டர்கள் கடுமையாக உழைத்து 40 திற்க்கு 40 தொகுதிகளை வெற்றியடைய செய்ததை போன்று, வரும் சட்டமன்ற தேர்தல் வெற்றிக்காக அயராது பாடுபட வேண்டும்.
மேலும் வரும் 16, 17, 23 மற்றும் 24ம் தேதிகளில் நடைபெறும் புதிய வாக்காளர் பட்டியல் பெயர் சேர்க்கும் முகாமில் 18 வயது பூர்த்தியடைந்தவர்களை வாக்காளர் பட்டியலில் இணைத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள ஆலோசனை வழங்கினார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நகர பொருளாளர் ஆறுமுகம், வாக்குசாவடி முகவர்கள் கவுன்சிலர் கார்த்திகேயன், பரமசிவம், ஜோதிவேல், சதிஷ் குமார், பாலு, சையத் உஸ்மான், யதிந்தர், சிவக்குமார் ஒன்றிய பிரதிநிதி கிருஷ்னகுமார், நகர இளைஞர் அணி அமைப்பாளர் வசிம், துணை அமைப்பாளர் விஜய், நகர துணை செயலாளர் மாதையன், முன்னாள் பேரூராட்சி செயலாளர் மணிவண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக