நிகழ்ச்சிக்கு மாவட்ட அவைத்தலைவர் மனோகரன் தலைமை வகித்தார். தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் வக்கில் ஆ.மணி, மாநில தீர்மானக் குழு உறுப்பினர் கீரை விஸ்வநாதன், மாவட்ட பொருளாளர் முருகன் ஒன்றிய செயலாளர் கிருஷ்ணன், நகர செயலாளர் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியில் பாலக்கோடு சட்டமன்ற பொறுப்பாளர் அரியப்பன், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற பொறுப்பாளர் நரேஷ்குமார், அரூர் சட்டமன்ற பொறுப்பாளர் செல்லதுரை ஆகியோரை மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் பழனியப்பன் அறிமுகம் செய்து பேசும் போது அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் பூத் கமிட்டி அமைக்க வேண்டும், தேர்தல் பார்வையாளர்கள் அனைத்து வாக்குசாவடி முகவர்களையும் சந்திக்க வேண்டும், வாக்குசாவடி முகவர்களாக ஆர்வமுள்ள பெண்களை நியமிக்க வேண்டும், ஒவ்வொரு தொகுதிக்கும் தனி கவனம் செலுத்தி வெற்றி பெற பாடுபட வேண்டும் என்பன உள்ளிட்டவைகள் குறித்து பேசினார்.
இந்த அறிமுக கூட்டத்தில் மாநில வர்த்தக அணி துணை செயலாளர் சத்யமூர்த்தி, ஒன்றிய செயலாளர்கள், பி.கே.அன்பழகன், அடிலம் அன்பழகன், வக்கில் கோபால், முனியப்பன், நகர செயலாளர்கள் பி.கே.முரளி, வெங்கடேசன், தலைமை செயற்குழு உறுப்பினர் மனோகரன் உள்ளிட்ட கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக