கடந்த வாரம் தருமபுரி அடுத்த தருமபுரி குமாரசாமிபேட்டை பகுதியில் உள்ள விஜயா மருத்துவமனையில் கடத்தூர் அருகே பழையபுதுரெட்டியூர் கிராமத்தை சேர்ந்த சந்தியா மற்றும் அவரின் குழந்தையின் மரணம் நிகழ்ந்த மருத்துவமனையில் சுகாதார துறை சார்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
விசாரணைக்கு பின், அம்மருத்துவமனையின் தரம் Level 3 -ல் இருந்து Level 2 ஆக தரவிறக்கம் செய்யப்படுவதாகவும், இனிவரும் காலங்களில் அம்மருத்துவமனையில் மிகவும் சிக்கலான நிலையில் உள்ள தாய்மார்களுக்கு மகப்பேறு சிகிச்சை அளிக்கக்கூடாது என தருமபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.கி.சாந்தி, இஆப., அவர்களின் உத்தரவின்பேரில் அறிவுறுத்தப்படுள்ளது.
மேலும் மாவட்டத்தில் இது போன்ற மரணங்கள் நிகழாமை இருக்க தருமபுரி மாவட்டத்தில் எந்த (level) நிலையில் உள்ள மருத்துவமனைகள் என்னென்ன சிகிச்சைகள் அளிக்கலாம் என்கிற விவரங்களை மாவட்ட ஆட்சியர் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக