வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் /நீக்கல் / திருத்தலுக்கான சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது. - மாவட்ட ஆட்சியர் தகவல். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 13 நவம்பர், 2024

வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் /நீக்கல் / திருத்தலுக்கான சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது. - மாவட்ட ஆட்சியர் தகவல்.


இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆணைப்படி, தருமபுரி மாவட்டத்தில் 01.01.2025 நாளை தகுதி நாளாக கொண்டு 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் (31.12.2006 அன்றோ அல்லது அதற்கு முன்பாக பிறந்தவர்கள்) மற்றும் வாக்காளர் பட்டியலில் விடுபட்ட தகுதி வாய்ந்த வாக்காளர்கள் தங்கள் பெயர்களை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கல், பெயர் திருத்தம் மற்றும் முகவரி திருத்தம் ஆகியவைகளை மேற்கொள்ள ஏதுவாக வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்த பணிகளானது 29.10.2024 முதல் 28.11.2024 வரையில் நடைபெற உள்ளது.


தருமபுரி மாவட்டத்தில், மொத்தம் உள்ள 1501 வாக்குச்சாவடிகளை உள்ளடக்கிய 907 வாக்குச்சாவடி மையங்களிலும் பெயர் சேர்த்தல் / நீக்கல் / திருத்தல் கோரிக்கைகளுக்காக படிவங்கள் பெறப்படும். தருமபுரி மாவட்டத்தில் உள்ள பாலக்கோடு, பென்னாகரம், தருமபுரி, பாப்பிரெட்டிப்பட்டி மற்றும் அரூர் ஆகிய 5 சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட அனைத்து வாக்குசாவடி மையங்களிலும் வாக்காளர்களிடமிருந்து படிவங்களை பெற்றிட வாக்குச்சாவடி மைய அலுவலர்கள் (DLO) நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 


படிவங்களை பெறுவதற்கு ஏதுவாக 16.11.2024, 17.11.2024, 23.11.2024 மற்றும் 24.11.2024 ஆகிய தேதிகளில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விண்ணப்பப் படிவங்களை நேரில் அளிக்கலாம். வாக்குச்சாவடி மையத்திற்கு நேரில் சென்று மனு அளிக்க இயலாதவர்கள் https://voters.eci.gov.in/ என்ற இணையதளம் மூலமாகவும், Voter Helpline என்ற கைப்பேசி செயலி (Mobile App) மூலமாகவும் விண்ணப்பங்களை அளிக்கலாம். 17 வயது முடிவடைந்த நபர்களும் தங்களது பெயரினை வாக்காளர் பட்டியலில் சேர்க்க முன்னதாகவே (Advance Filling) விண்ணப்பிக்கலாம். 


எனினும் 01.01.2025-ஆம் நாள் அன்று 18 வயது பூர்த்தியடைந்த (31.12.2006 அன்றோ அல்லது அதற்கு முன்னதாவோ பிறந்துள்ள) நபர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே இந்த சிறப்பு சுருக்க திருத்த காலத்தில் பரிசீலினைக்கு எடுத்துக்கொள்ளப்படும். மீதமுள்ள விண்ணப்பங்கள் விண்ணப்பதாரர்களின் வயது எதிர்வரும் ஏப்ரல்-1, ஜீலை-1 மற்றும் அக்டோபர்-1 ஆகிய நாட்களில் 18 வயதை பூர்த்தியடையும் பொழுது சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலரால் பரிசீலிக்கப்பட்டு தகுதியானவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும்.


மேற்கண்டவாறு பெறப்பட்ட விண்ணப்பங்கள் மீது விசாரணை மேற்கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணிகள் முடிக்கப்பட்டு இறுதி வாக்காளர் பட்டியல் 06.01.2025 அன்று வெளியிடப்படுகிறது. இவ்வாறு மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad