இக்கூட்டத்திற்க்கு ஒன்றிய அவைத் தலைவர் சிவராஜ், பென்னாகரம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் பாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் தலைமை யாரை வேட்பாளராக அறிவித்தாலும் அவரது வெற்றிக்கு அனைவரும் உழைக்க வேண்டும், இப்போது இருந்தே தின்னை பிரச்சாரம், தெருமுனை பிரச்சாரசத்தில் ஈடுபட வேண்டும், மகளிர் உரிமைத் தொகை, மகளிர் இலவச பேருந்து, மாணவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் குறித்து பொது மக்களுக்குள் தெரியபடுத்தும் வகையில் பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இக்கூட்டத்தில் ஒன்றிய துணை செயலாளார் கிருஷ்ணன், ஒன்றிய பொருளாளர் பூமணி, மாவட்ட பிரதிநிதிகள் சண்முகம், முத்தப்பன், பெரிய நஞ்சப்பன், ஊராட்சி மன்ற தலைவர் குட்டி, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் கந்தசாமி, மற்றும் மாநில, மாவட்ட, ஒன்றிய, கிளை கழக நிர்வாகிகள், சார்பு அணி அமைப்பாளர்கள், தொண்டர்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக