முன்னாள் படைவீரர்கள் ஓய்வூதியம் தொடர்பான தகவல்கள் மற்றும் சந்தேகங்களுக்கள் தொடர்பாக நடைபெறும் விழிப்புணர்வு கூட்டம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 4 நவம்பர், 2024

முன்னாள் படைவீரர்கள் ஓய்வூதியம் தொடர்பான தகவல்கள் மற்றும் சந்தேகங்களுக்கள் தொடர்பாக நடைபெறும் விழிப்புணர்வு கூட்டம்.


தருமபுரி மாவட்டதைச் சார்ந்த ஓய்வூதியம் பெறும் முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்தம் சார்தோர்கள் ஓய்வூதியம் தொடர்பான தகவல்கள் மற்றும் சந்தேகங்களுக்கள் தொடர்பாக நடைபெறும் விழிப்புணர்வு கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களின் ஓய்வூதியம் தொடர்பாக குறைகளை முறையீட்டு தீர்வு கண்டு பயன்பெறலாம்.


மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி,இ.ஆ.ப., அவர்கள் தகவல் இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளதாவது: தருமபுரி மாவட்டத்ததை சார்ந்த இராணுவ ஒய்வூதியம் பெறும் முன்னாள் படைவீரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறும் முன்னாள் படைவீரர்களை சார்தோர்கள் அறிவது. ஓய்வூதியம் தொடர்பான தகவல்கள் (SPARSH) திட்டம் ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்கள் ஏதேனும் நடைமுறை சந்தேகம் உள்ளவர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம் சென்னை (CDA ) IDAS அலுவலர் அவர்களால் தருமபுரி மாவட்டம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சார்ந்த முன்னாள் படைவீரர்கள் /அவர்தம் சார்ந்தோர்களுக்கு ஒருங்கிணைந்து கூட்டம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள SW திருமண மண்டபத்தில் 6.11.2024 அன்று காலை 9.00 மணிக்கு நடைபெறவுள்ளது.


எனவே தருமபுரி மாவட்டதை சார்ந்த ஓய்வூதியம் பெறும் முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்தம் சார்தோர்கள் கலந்து கொண்டு தங்களின் ஓய்வூதியம் தொடர்பாக குறைகளை முறையீட்டு தீர்வு கண்டு பயன் அடைந்திடுமாறும். இது குறித்து கூடுதல் தகவல்களுக்கு தருமபுரி மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தினை தொடர்பு கொள்ளலாம். என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி,இ.ஆ.ப., அவர்கள் தனது செய்தியறிக்கையில் தெரிவித்துள்ளார். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad