பென்னாகரம் அடுத்த ஜங்கமையனூர் கிராமத்தில் இலவச இயன்முறை மருத்துவ முகாம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 16 நவம்பர், 2024

பென்னாகரம் அடுத்த ஜங்கமையனூர் கிராமத்தில் இலவச இயன்முறை மருத்துவ முகாம்.


தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், செங்கனூர் பஞ்சாயத்து, ஜங்கமையனூர் கிராமத்தில் 
மீனாட்சி இயன்முறை மருத்துவ கல்லூரி சார்பில் இலவச இயன்முறை மருத்துவ முகாமில் கழுத்து வலி, தோள்பட்டை வலி, முதுகுவலி, கை கால் வலி, தசை பிடிப்பு, பக்கவாதம், நரம்பு இழுத்தல் மற்றும் தண்டுவட பாதிப்புகள் போன்றவைக்கு சிகிச்சை அளித்தும் மற்றும் விழிப்புணர்வு செய்தும் மக்களுக்கு பயன் பெற செய்யப்பட்டனர்.


இம்முகாமிற்கு ஊராட்சி மன்றத்தலைவர் மணி தலைமை தாங்கி துவக்கி வைத்தார், இம்முகாமிற்க்கு சின்னபள்ளத்தூர் தலைமை ஆசிரியர் மா. பழனி, வருவாய் துறை அலுவலர் சக்தி மற்றும் அனைத்து முன் ஏற்பாடு களையும் உதவி பேராசிரியர் மற்றும் சமூக ஆர்வலர் மதிப்பிற்குரிய சா கனகராஜ், N கண்ணபிரான் மற்றும் ராஜீவ் குழுவினர் செய்து இருந்தனர்.


மருத்துவ கல்லூரி மாணவர்கள் சார்பாக வருகை புரிந்த விருந்தினர்களுக்கு பொன்னாடை அணிவித்து இனிப்பு வழங்கி மரியாதை செய்தனர். பிறகு இம்முகாமில் பல்வேறு கிராமங்களில் இருந்து 150 க்கும் மேற்பட்ட நோயாளிகள் பயன் பெற்றனர். பொது மக்கள் சார்பில் இம்முகாமுக்கு அனுமதி அளித்த மீனாட்சி இயன் முறை மருத்துவ கல்லூரி முதல்வர் Dr. பார்த்தசாரதி மற்றும் நிர்வாகம், குழு ஒருங்கிணைப்பாளர் Dr.P.V.ஹரி ஹர சுப்ரமணியன் மற்றும் மாணவ மாணவிகளுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. 


11 மருத்துவ மாணவர்கள் குழு கொண்ட முகாமில் காயத்ரி, உஷாஶ்ரீ, தனுஷியா, வர்ஷா.K, ஹர்ஷினி பாலா, பேசில் தாமஸ், ரோஹிதா, P. இசக்கியா ஜான் போவஸ், ஜெகன், மாரிச்செல்வி மற்றும் பூஜா ஆகியோரால் சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் இக்குழு 17.11.2024 அதக்கபாடி, 18.11.2024 சோகத்தூர் ஆகிய பஞ்சாயத்துகளில் முகாம் நடக்கும் என மருத்துவ மாணவ குழுவினரால் தெரிவித்தனர். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad