பாலக்கோடு அடுத்த ஜெர்தலாவ் ஊராட்சியில் தூய்மை பணியாளர்களுடன் தீபாவளி கொண்டாடிய ஊராட்சி மன்ற தலைவர் முத்துமணி ஆனந்தன். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 1 நவம்பர், 2024

பாலக்கோடு அடுத்த ஜெர்தலாவ் ஊராட்சியில் தூய்மை பணியாளர்களுடன் தீபாவளி கொண்டாடிய ஊராட்சி மன்ற தலைவர் முத்துமணி ஆனந்தன்.


தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த ஜெர்தலாவ் ஊராட்சியில் பணிபுரியும்,  தூய்மை பணியாளர்களுக்கு  தீபாவளியை முன்னிட்டு தூய்மை பணியாளர்களுக்கு மற்றும் வார்டு உறுப்பினர்களுக்கு புத்தாடைகள் மற்றும் இனிப்புக்கள் வழங்கும் நிகழ்ச்சி ஊராட்சி மன்ற தலைவர் முத்துமணி ஆனந்தன்  தலைமையில்  நடைப்பெற்றது.


நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற துணைத் தலைவர்  ரவி முன்னிலை வகித்தார். ஊராட்சிமன்ற தலைவர் முத்துமணி ஆனந்தன் தூய்மை பணியாளர்கள், மற்றும் வார்டு உறுப்பினர்களுக்கு புத்தாடைகள் மற்றும் இனிப்புக்கள் வழங்கினார்.


இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற செயலாளர் சஞ்சீவன், வார்டு உறுப்பினர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர்கள் திரளாக கலந்து கொண்டார்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad