தருமபுரி மாவட்டத்தில், 2001ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு வரையிலான காலக்கட்டங்களில் முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து பயனடைந்து, வைப்புத் தொகை இரசீது பெறப்பட்டு தற்போது 18 வயது முடிவடைந்த பெண் குழந்தைகளுக்கு உடனடியாக முதிர்வுத் தொகை வழங்கும் பொருட்டு பயனாளிகளின் நடைமுறையில் உள்ள வங்கி கணக்கு புத்தகம், மாற்றுச் சான்றிதழ், 10 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்று, மற்றும் வைப்புத் தொகை இரசீது ஆகியவற்றின் நகல் உள்ளிட்ட ஆவணங்களுடன் பயனாளிகள் அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலகம் மூலம் சமூக நல விரிவாக்க அலுவலர்கள் மற்றும் ஊர் நல அலுவலர்களை (மகளிர்) உடனடியாக அனுகி விவரங்கள் சமர்ப்பித்து பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் முதிர்வுத் தொகை பெற்று பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சியர் அவர்கள் தனது செய்தியறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மேலும் விபரங்கள் பெற அனுக வேண்டிய முகவரி மாவட்ட சமூக நல அலுவலகம், கூடுதல் கட்டிட வளாகம், மாவட்ட ஆட்சியரகம், தருமபுரி மாவட்டம் .தொலைபேசி எண். 04342-233088
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக