தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த வட்டுவனஅள்ளி ஊராட்சியில் அலகட்டு மலைக் கிராமம் அமைந்துள்ளது.மலை கிராமமான இந்த ஊரில் சுமார் 600 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு கிராமத்திற்கு எந்த ஒரு அடிப்படை வசதியும் இதுவரை அரசாங்கத்தால் செய்து தரவில்லை. மலை சார்ந்த பகுதி என்பதால் கிராமத்தில் சாலை வசதி வேண்டி பலமுறை கிராம மக்கள் பல அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தும் ஆர்ப்பாட்டங்கள் செய்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில் ருத்ரப்பா மகள் கஸ்தூரி 13 வயது சிறுமி இவர் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் இன்று தோட்டத்தில் கீரை பறித்துக் கொண்டிருந்த பொழுது பாம்பு பாம்பு கடித்துள்ளது. இந்நிலையில் அருகில் இருந்தவர்கள் சிறுமியை தூலி கட்டி சாலையில்லா மலைப்பாதையில் தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு செல்லும் பொழுது சிங்காடு தார் சாலை பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்ட ஆட்டோவில் சிறுமியை மருத்துவமனைக்கு ஏற்றும் பொழுது சிறுமி உயிர் இழந்ததாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. போதுமான சாலை வசதி இல்லாதது சிறுமையின் சாவுக்கு காரணம் எனபொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக