கிறிஸ்தவர்கள் இறந்த தங்களது உறவினர்களை நினைவு கூர்ந்து வழிபடும் கல்லறை திருநாள் தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடந்தது. முன்னதாக கிறிஸ்தவர்கள் தங்கள் மூதாதையர் நினைவிடத்தை தூய்மைப்படுத்தி பூமாலை அணிவித்து வணங்கி வழிபட்டனர். ஒகேனக்கல் கல்லறை தோட்டத்தில் கல்லறை திருநாள் நடந்தது.
இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு தங்களை விட்டு பிரிந்த முன்னோர்களை நினைவு கூர்ந்து அவர்களது நினைவிடத்தை சுத்தம் செய்து பூக்களை பரப்பி மாலை அணிவித்து மெழுகுவர்த்தி ஏற்றி வழிபட்டனர். மேலும் கல்லறை திருநாள் சிறப்பு பிரார்த்தனை தேவாலயங்களில் நடந்த கல்லறைகள் மற்றும் அருகிலிருந்த கல்லறை தோட்டத்தில் உள்ள அனைத்து கல்லறைகளுக்கும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
கல்லறை தோட்டத்தில் உள்ள இறந்த தாய், தந்தையர், உறவினர்கள், நண்பர்களின் கல்லறைகளுக்கு வர்ணம் பூசி, மலர்களால் அலங்கரித்து, மெழுகுவர்த்திகள் ஏற்றிவைத்து கிறிஸ்தவர்கள் வழிபட்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக