தருமபுரி தனியார் மருத்துவமனையில் பிரசவத்தின் போது தாயும் சேயும் உயிரிழப்பு. உறவினர்கள் மருத்துவமனை முன்பு தர்ணா. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 13 நவம்பர், 2024

தருமபுரி தனியார் மருத்துவமனையில் பிரசவத்தின் போது தாயும் சேயும் உயிரிழப்பு. உறவினர்கள் மருத்துவமனை முன்பு தர்ணா.


தருமபுரி மாவட்டம் கடத்தூர் அருகே பழையபுதுரெட்டியூர்  கிராமத்தைச் சேர்ந்த சங்கர் பார்வதி தம்பதியினரின் மகன்  கோகுல கண்ணன் (27). இவர் விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு அஷ்தகிரியூர் பகுதியைச் சேர்ந்த அம்சவேல் நாகமணி தம்பதியினரின் மகள் சந்தியா(24) என்பவருக்கும் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. 


இவர்களுக்கு இரண்டு வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ள நிலையில் சந்தியா மீண்டும் கர்ப்பமாகி தருமபுரி குமாரசாமிபேட்டை பகுதியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் கருவுற்ற நிலையில் ஆரம்பத்திலிருந்து முறையான மருத்துவ பரிசோதனை செய்து வந்துள்ளனர்.


இந்த நிலையில் நேற்று இரவு சந்தியாவுக்கு வயிற்று வலி ஏற்பட்டது உடனடியாக மருத்துவமனைக்கு போன் செய்து மருத்துவர் இருக்கிறாரா என கோகுல கண்ணன் விசாரித்துள்ளார் அப்பொழுது மருத்துவமனையில் மருத்துவர் இருக்கிறார் உடனடியாக சிகிச்சைக்கு அழைத்து வாருங்கள் என தெரிவித்த நிலையில் சந்தியாவை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.


அப்பொழுது மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லாமல் செவிலியர் மற்றும் தூய்மை பணியாளர் மட்டுமே பணியில் இருந்ததாகவும் அப்பொழுது சந்தியாவுக்கு அவர்களே மருத்துவம் பார்த்ததாகவும் அப்பொழுது சந்தியாவுக்கு வழிப்பு ஏற்பட்டதாகவும் அப்பொழுது சந்தியாவின் கணவர் மற்றும் அம்மாவிடம் சந்தியா உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் கையெழுத்து போடுங்கள் என தெரிவித்துள்ளனர், உடனடியாக அறுவை சிகிச்சை செய்யபோது குழந்தை இறந்து பிறந்ததாக தெரிவித்துள்ளனர் சந்தியா மிகவும் ஆபத்தான நிலையில் அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளதால் உடனடியாக ரத்தம் தேவைப்படுவதாக கூறியுள்ளனர். 


இறுதி நேரத்தில் இந்த மருத்துவமனையில் அவர்களுக்கு சிகிச்சை வழங்க போதுமான மருத்துவ உபகரணங்கள் இல்லை எனவே தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும் எனக் கூறி யாரிடமும் சொல்லாமல் சந்தியாவை கூட்டிச்சென்றதாக தெரிகிறது, அங்கு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட பொழுது சந்தியா ஏற்கனவே இறந்துவிட்டார் என அரசு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.


மருத்துவமனையில் முறையான சிகிச்சை வழங்காமல் தாய் மற்றும் சேய் இரண்டு பேர் உயிரிழப்பு ஏற்பட்டதற்கு காரணம் அவர்களுடைய கவன குறைவு  மற்றும் மருத்துவர்கள் இல்லாததே காரணம் என உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். 


தகவல் அறிந்து வந்த வருவாய் துறையினர் மற்றும் காவல்துறையினர் மருத்துவமனை நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர் இதனால் மருத்துவமனை வளாகத்தில் பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

Post Top Ad