விவசாயிகளிடமிருந்து நேரடியாக ராகி கொள்முதல் செய்யும் நிலையத்தினை ஆட்சியர் கி.சாந்தி தொடங்கி வைத்தார். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 6 நவம்பர், 2024

விவசாயிகளிடமிருந்து நேரடியாக ராகி கொள்முதல் செய்யும் நிலையத்தினை ஆட்சியர் கி.சாந்தி தொடங்கி வைத்தார்.


மதிகோண் பாளையம் பகுதியில்  விவசாயிகளிடமிருந்து நேரடியாக ராகி கொள்முதல் செய்யும் நிலையத்தினை ஆட்சியர் கி.சாந்தி தொடங்கி வைத்து, 1.64 இலட்சம் மதிப்பிலான 3800 ராகியை கொள்முதல் செய்தனர்.


நீலகிரி, தருமபுரி மாவட்டத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு பொது வினியோக திட்டத்தின் கீழ் ஊட்டசத்து பாதுகாப்பினை உறுதி செய்வதற்காக ஒரு குடும்பத்திற்கு மாதம் ஒன்றுக்கு அரிசிக்கு பதிலாக 2 கிலோ ராகி வினியயோகம் செய்யப்படுகிறது. 


இதற்கான ராகியை சிறு குறு விவசாயிகளிடமிருந்து கொள்முதல் நிலையத்தினை  தருமபுரி, வேளாண்மை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் ராகி கொள்முதல் நிலையத்தினை மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி தொடங்கக வைத்தார். இன்று 6 சிறு குறு விவசாயிகளிடமிருந்து கிலோ 42.90 ரூபாய் என 3800 கிலோ ராகி 1.63 இலட்சத்தகற்கு கொள்முதல் செய்யப்பட்டது. 


விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைப்பதால், விவசாயிகள் தங்களது ராகியை அரசு கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்து பயன்படுத்திக்க கொள்ள வேண்டும் என ஆட்சியர் கி.சாந்தி அறிவுறுத்தினார். இந்த நிகழ்ச்சியில் நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் தேன்மொழி, ராகி விவசாயிகள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad