பாலக்கோடு புறவழிச்சாலை பிரிவு பகுதியில் தாறுமாறாக ஓடும் வாகனங்களால் விபத்துகள் அதிகரிப்பு- காவல்துறை தடுப்பு(பேரிகார்டு) அமைக்காமல் மெத்தனம் - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 13 நவம்பர், 2024

பாலக்கோடு புறவழிச்சாலை பிரிவு பகுதியில் தாறுமாறாக ஓடும் வாகனங்களால் விபத்துகள் அதிகரிப்பு- காவல்துறை தடுப்பு(பேரிகார்டு) அமைக்காமல் மெத்தனம்

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு நகருக்கு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் நாள்தோறும் பல்வேறு வேலைகளுக்கு வந்து செல்கின்றனர்.உள்ளூர் மற்றும் வெளியூர், வெளிமாவட்ட, மாநிலங்களில் இருந்தும் ஒகேனக்கல் சுற்றுலா தளத்துக்கு செல்வதற்கும் பாலக்கோடு நகரம் பிரதானமாக மையமாக  உள்ளது. 


மேலும் பாலக்கோடு புறவழிச்சாலை பிரிவு பகுதியில் அடிக்கடி வாகன விபத்துகள் ஏற்பட்டு வந்த நிலையில் இப்பகுதி ஆய்வு மேற்கொண்ட வட்டார போக்குவரத்து அலுவலர் தாமோதரன் அவர்கள்  இப்பகுதியை விபத்து பகுதியாக அறிவித்து ஆங்காங்கே தடுப்புகள் அமைத்து வாகனங்களை வேகத்தை குறைக்கும் வகையில் அமைத்து வாகனங்கள் செல்ல வழிவகை செய்ய வேண்டும் என பாலக்கோடு உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளரிடம் தெரிவித்தார்.


ஆனால் மூன்று மாதங்கள் கடந்தும் தற்போது வரை இப்பகுதியில் தடுப்புகள் அமைக்கப்படாததால் பகல் மற்றும் இரவு நேரங்களில் தாறுமாறாக வாகனங்கள்  இயக்கப்படுவதால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் தற்போது அனைத்து பேரி கார்டுகளும் என்ன ஆனது என தெரியவில்லை என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.   காவல்நிலையம் பாதுகாப்பிற்கு வைக்கப்பட்டுள்ளதால் நெடுஞ்சாலையில் அதிவேகமாக வரும் வாகனங்கள் கட்டுப்பாட்டை இழந்து மோதி விபத்து ஏற்படுத்தி வருகின்றன.


இதனால் பொதுமக்கள் மட்டுமின்றி பள்ளி கல்லூரி மாணவர்களின்  உயிருடன் விளையாடும் நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து தெரிந்தும் காவல்துறை உயர் அதிகாரிகள்  கண்டுகொள்ளாமல் வேடிக்கை பார்த்து வருவதால், தமிழக முதல்வர் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad