தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு பேருந்து நிலையம் முன்பு முன்னாள் பாரத பிரதமர் இந்திராகாந்தியின் 107 வது பிறந்த நாள் விழா காங்கிரஸ் கட்சி சார்பில் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு வட்டார தலைவர் கனேசன் தலைமை வகித்தார்.
மாவட்ட கவுன்சிலர் சண்முகம், வட்டார துணைத் தலைவர் பாலாஜி குமார், ஐ.என்.டி.யு.சி தொழிற்சங்க மாநில தலைவர் கோவிந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் பேருந்து நிலையம் முன்பு அமைக்கப்பட்டிருந்த இந்திராகாந்தியின் உருவ படத்திற்க்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். அதனை தொடர்ந்து பொது மக்களுக்கு இனிப்புக்கள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் காரிமங்கலம் வட்டார தலைவர் செந்தில்நாதன், நகர பொறுப்பாளர்கள் சீதாராமன், சுப்ரமணி, கோவிந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக