தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள ஒகேனக்கல்லில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கலையரங்க மாநில பயிற்சி முகாம் இன்று மற்றும் நாளை நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அவர்கள், பென்னாகரத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
நாடு விடுதலைக்குப் பிறகு அதிமுக ஆட்சியில் தான் மிகப்பெரிய சட்டம் ஒழுங்கு ஏற்பட்டது தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு நடைபெற்றது அந்த வேதாந்த நிறுவனத்தை உச்சநீதிமன்றமே மூட உத்தரவிட்டுள்ளது இதை அதிமுக ஆட்சியில் செய்திருந்தால் 13 பேரின் உயிர் பறிபோயிருக்காது. இந்த நிலையில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது என எடப்பாடி பழனிசாமி சொல்வது அரசியல் உள்நோக்கம் கொண்டது.
அதிமுக பாஜக கூட்டணி நெருக்கமாக இருப்பதாக யூகங்கள் தெரிவிக்கின்றன. அதுபோல தான் ஒரு நாளைக்கு எடப்பாடி பாஜகவோடு கூட்டணி இல்லை என்று சொல்கிறார். மற்றொரு நாள் தேர்தல் நேரத்தில் கூட்டணி எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் என தெரிவிக்கிறார். இதையெல்லாம் பார்க்கும் பொழுது அதிமுக பாஜக கிட்டத்தட்ட நெருங்கி இருப்பதாகவே தெரிகிறது.
சினிமா நடிகர்கள் அரசியலுக்கு வரும்போது, மோகம் பெரியதாக இருக்கும். தவெக-வுடன் எந்த கட்சிகளும் கூட்டணி வைக்கிறோம் என்று சொல்லவில்லை. அது அரசியல் களத்தில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது. கடந்த காலங்களில் பெரிய பெரிய ஜாம்பவான்கள் கூட கட்சி தொடங்கினார்கள் மக்களிடத்தில் நடிகர்கள் என்ற எதிர்பார்ப்பு இருக்குமே தவிர அரசியல் களத்தில் அது சுத்தமாக எடுபடாது.
வருகிற 2026 சட்டமன்ற தேர்தல் களத்தில் இதே திமுக கூட்டணியோடு தான் தேர்தலை சந்திக்க போகிறோம். ஆட்சியில் பங்கு என்பது ஒரு கட்சி ஆட்சியில் நான்கு கட்சி பங்கு கொள்வது சரியாக இருக்காது. கொள்கையை ரீதியாக மக்களை சந்தித்து வாக்கு பெற்று திட்டங்களை அமல்படுத்துவது தான் உண்மையான பகிர்வாக இருக்கும். ஒரு கூட்டணி ஆட்சி என்பது கொள்கை ரீதியாக திட்டத்தின் அடிப்படையில் இருக்க வேண்டும் அது போன்ற ஆட்சி 2026 இல் அமையப்போவதில்லை என்றுதான் சொல்கிறோம்.
மத்திய பாஜக அரசு, அனைத்து திட்டங்களுக்கும், ஆங்கிலத்தில் உள்ள பெயர்களை நீக்கிவிட்டு திட்டமிட்டு இந்தியில் பெயர் வைக்கின்றனர். இந்திக்கு மட்டும் ஏன் இவ்வளவு விசேஷ அங்கீகாரம். இந்தியாவில் 18 அங்கீகரிக்கப்பட்ட மொழிகள் இருக்கின்ற பொழுது இந்திக்கு மட்டும் 800, 900 கோடி அதிகப்படியாக நிதி ஒதுக்குகி, மொழியை வளர்த்த இந்தியை பரப்ப நிதி ஒதுக்கிறார்கள்.
ஆனால் தமிழர் தமிழ் மொழிக்கு மட்டும் இருபது கோடி கூட ஒதுக்குவதில்லை. இந்தியை திட்டமிட்டு திணிக்கும் உள் நோக்கத்தோடு செயல்படுகிறார்கள். மொழி பாரபட்சத்தை காட்டுகிறது இது வன்மையாக கண்டிக்கத்தக்கது என தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக