தர்மபுரி மாவட்டம், அரூரை சேர்ந்த இளங்கேஸ்வரன் (வயது .27) இவர் பாலக்கோடு நீதிமன்றத்தில் கடை நிலை ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர் திருப்பூர் மாவட்டம் இடும்பன் பாளையம் கிராமத்தை சேர்ந்த கெளரி (வயது. 25) என்பவரை காதலித்து கடந்த 2023ம் ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். இருவரும் பாலக்கோடு திருவள்ளுவர் நகரில் குடி இருந்து வந்தனர். கெளரி 2 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.
இந்நிலையில் இளங்கேஸ்வரன் தனது மனைவியை செக்ஸ் டார்ச்சர் செய்து, அடித்து துன்புறுத்தியதில் கெளரியின் கர்ப்பம் கலைந்துள்ளது. தொடர்ந்து இளங்கேஸ்வரன் கெளரியை செக்ஸ் டார்ச்சர் செய்து துன்புறுத்தியதால் கெளரி பாலக்கோடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து பாலக்கோடு போலீசார் வழக்கு பதிவு செய்து இளங்கேஸ்வரனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தர்மபுரி சிறையில் அடைத்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக