இங்கு மாதம்தோறும் தேய்பிரை அஸ்டமி அன்று தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்தும், கர்நாடக மாநிலத்திலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வரிகை புரிகின்றனர், இன்று காலபைரவர் ஜெயந்தியையொட்டி அதிகாலையில் சிறப்பு யாகம், அதனை தொடர்ந்து காலபைரவருக்கு அபிஷேகம், நடைபெற்று பின்னர் ராஜ அலங்காரத்தில் காலபைரவர் பக்தர்களுக்கு அருள் பாவித்தார்.
காலை முதலே ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர் தமிழகம் இல்லாத கர்நாடக மாநிலம் பெங்களூரிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து பூசணி தீபமேற்றி தங்களது நேர்த்திகடனை செலுத்தி வழிபட்டனர், ஜெயந்தி விழாவில் பங்கேற்ற அனைத்து பக்தர்களுக்கும் உழவார பணிக்குழுவினர் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது பக்தர்களின் பாதுகாப்பை கருதி காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் அதைத்தொடர்ந்து இன்று இரவு 10.30மணிக்கு 1008கிலோ மிளகாய் 108 கிலோ மிளகு சத்ரு சம்ஹார யாகம் நடைபெறும் 64 பைரவர் யாகம் மகா குருதி பூஜை இரவு 2.30மணிக்கு பைரவர் சுவாமி பல்லாக்கில் திருக்கோயிலை வளம் வருதல் அதிகாலை 3 மணிஅளவில் 108 லிட்டர் பால் அபிஷேகம் நடைபெறும் கலச அபிஷேகம் எட்டு வகையான பல அபிஷேகங்கள் நடைபெறும் சுவாமிக்கு சத்ரு சம்ஹாரம் அலங்காரம் செய்யப்படும் சதுர்வேத பாராயணம் சிறப்பு தரிசனம் நடைபெறும் கோவில் நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக