குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணிய சாமி கோவிலில் கந்த சஷ்டி லட்சார்ச்சனை திருவிழா. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 7 நவம்பர், 2024

குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணிய சாமி கோவிலில் கந்த சஷ்டி லட்சார்ச்சனை திருவிழா.


தர்மபுரி குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணிய சாமி கோவிலில் 60-வது ஆண்டு கந்த சஷ்டி லட்சார்ச்சனை திருவிழா இன்று முக்கிய நாளான 6 வது நாளாக  மூலவர் மற்றும் உற்சவர் சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது. பின்னர் கோவில் பிரதான மண்டபத்தில் சிறப்பு யாகசாலை பூஜைகள் மற்றும் விக்னேஸ்வர பூஜை உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து யாகசாலையில் இருந்து புனிதநீர் மேளதாளத்துடன் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

இதை அடுத்து சாமிக்கு கந்த சஷ்டி  லட்சார்ச்சனை தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று முக்கிய நாளான 7-ம் தேதி (மதியம் வரை தினமும் 4 காலங்களிலும் சிறப்பு லட்சார்ச்சனை மற்றும் அபிஷேக ஆராதனை, திருமுறை பாராயணத்துடன் பக்தர்கள் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் 108 சுற்று சுற்றி வந்து முருகர் தங்க கவுசல் அணிந்து பக்தர்களுக்கு தரிசனம் அளித்தார்.


விழாவின் இரவு 7 மணிக்கு கோவிலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட தங்க மண்டபத்தில் சுப்பிரமணிய சாமி மற்றும் சூரபத்மன் புறப்பாடும், தொடர்ந்து பைபாஸ் ரோட்டில் உள்ள சாமி நிலத்தில் வானவேடிக்கையுடன் சூரசம்ஹார விழாவும் நடக்கிறது. இந்த நிகழ்ச்சியில் சூரபத்மணை முருகப்பெருமான் வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. தொடர்ந்து சாமிக்கு உபகார பூஜைகள் மற்றும் மகா தீபாரதனை நடக்கிறது. இந்த விழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் விழா நடைபெறுகிறது. இதை தொடர்ந்து இரவு 12 மணிக்கு கோவிலில் சாமிக்கு பன்னீர் அபிஷேகம் நடக்கிறது. வருகிற 8-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணிக்கு பூர்த்தி ஹோமமும், தொடர்ந்து மாலை 4 மணிக்கு இடும்பன் சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் வழிபாடுகளும் நடக்கிறது. இரவு 9 மணிக்கு தெய்வானை திருக்கல்யாணம் உற்சவமும், பொன்மயில் வாகனத்தில் சாமி திருவீதி உலாவும் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர், அறங்காவலர் குழுவினர் மற்றும் செங்குந்தர் சமூகத்தினர் செய்து வருகிறார்கள்

கருத்துகள் இல்லை:

Post Top Ad