தர்மபுரியில் தென்னிந்திய கராத்தே அசோசியேசன் சார்பில் கராத்தே பெல்ட் டெஸ்ட் போட்டி தர்மபுரி குமாரசாமிபேட்டை தனியார் திரையரங்க வளாகத்தில் நடைபெற்றது. போட்டியில் ஆறு வயது முதல் 14 வயதிற்கு உட்பட்ட மாணவ மாணவியர் கலந்து கொண்டனர். கட்டா டீம் கட்ட .குமித்தே பிரிவுகளில் மாணவர்கள் தங்கள் திறமையை வெளிகாட்டினர். சிறப்பாக செய்து காட்டிய 200க்கும் மேற்பட்ட வீரர்களுக்கு பல்வேறு பகுதியிலிருந்து தர்மபுரி அதியமான்கோட்டை, நல்லம்பள்ளி, சோலைகொட்டாய், பெரியாம்பட்டி, மாட்லாம்பட்டி, காரிமங்கலம் போன்ற பகுதிகளில் இருந்து மாணவ மாணவிகள் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் சான்றிதழ் வழங்கப்பட்டது. தென்னிந்திய கராத்தே அசோசியேசன் தலைவர் கிராண்ட் மாஸ்டர் ஹன்சி நடராஜ் கராத்தே பெல்ட் பாராட்டு சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கி பாராட்டினர்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக