சேலம் பெரியார் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையிலான ஆடவர் டேக்வோன்டோ போட்டிகளில் தர்மபுரி அரசு கலைக் கல்லூரி மாணவர் தில்லைநாதனுக்கு வெள்ளிப்பதக்கம், சேலம் பெரியார் பல்கலைக்கழக ஆளுகைக்கு உட்பட்ட கல்லூரிகளுக்கு இடையிலான ஆடவர் டேக்வாண்டோ போட்டிகள் அண்மையில் தர்மபுரி டான்பாஸ்கோ கல்லூரியில் நடைபெற்றது.
அதில் தர்மபுரி அரசு கலைக்கல்லூரி இளம் அறிவியல் தாவரவியல் துறை இரண்டாம் ஆண்டு மாணவன் கே.தில்லைநாதன் - 74 கிலோ எடை பிரிவில் கலந்து கொண்டு இரண்டாம் இடம் (வெள்ளிப்பதக்கம்) பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளார்.
பதக்கம் வென்ற மாணவன் தில்லைநாதன் மற்றும் உடற்கல்வி இயக்குனர் முனைவர் கு. ஆகியோரை கல்லூரி முதல்வர் முனைவர் கோ கண்ணன் அனைத்து துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் அலுவலகப் பணியாளர்கள், கௌரவ விரிவுரையாளர்கள் விளையாட்டு ஆர்வலர்கள், மாணாக்கர்கள் வாழ்த்தினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக