பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரத்தில் டிஜிட்டல் பயிர் சாகுபடி பதிவு பணி துவக்கம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 16 நவம்பர், 2024

பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரத்தில் டிஜிட்டல் பயிர் சாகுபடி பதிவு பணி துவக்கம்.

பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரத்தில் 50 ஆயிரத்து 800 சர்வே உட்பிரிவுகளில் இதுவரை 47 ஆயிரத்து 800 சர்வே உட்பிரிவுகளுக்கு டிஜிட்டல் பயிர் சாகுபடி பதிவுகள் செய்யப்பட்டுள்ளது என பாப்பிரெட்டிப்பட்டி வேளாண்மை துறையின் சார்பில் அதன் வேளாண் உதவி இயக்குனர் திரு.எஸ். அருணன் அவர்கள் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில் பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரத்தில் தமிழ்நாடு அரசு உத்தரவின் படி டிஜிட்டல் பயிர் கணக்கீட்டு பணி நடைபெற்று வருகிறது.


இந்த டிஜிட்டல் கணக்கிட்டு பணிக்கு தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் மாணவிகள் 60 பேர் மற்றும் பேராசிரியர்கள் நமது பகுதியில் தங்கி இந்த கணக்கீட்டு பணியை செய்து வருகின்றனர். இவ்வாறு கணக்கீடு செய்வது இதுவே முதல் முறையாகும். இதன் மூலம் சாகுபடி செய்யப்படும் பரப்பு மற்றும் பயிர் வகைகள் துல்லியமாகவும், விரைவாகவும், விவசாயிகள் அதன் விவரங்களை பெறுவதற்கு மிகவும் எளிமையாக இருக்கும்.டிஜிட்டல் பயிர் கணக்கிட்டு பணி இனி வரும் காலங்களில் காரீப் மற்றும் ரபி, கோடை பருவங்களிலும் இப்பணி மேற்கொள்ளப்படும். 


மேலும் பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரத்தில் உள்ள 46 வருவாய் கிராமங்களிலும் இந்தப் பணி தற்பொழுது நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் உள்ள 50 ஆயிரத்து 800 சர்வே உட்பிரிவுகளில் இதுவரை 47 ஆயிரத்து எண்ணூறு உட்பிரிவுகளுக்கு டிஜிட்டல் பயிர் கணக்கீடு பணி செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 7000  உட்பிரிவுகளுக்கு    எஸ். அம்மாபாளையம் மற்றும் சித்தேரி மலை கிராமங்களில் நாளை பதிவு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இன்று நடைபெற்ற டிஜிட்டல் பயிர் கணக்கிட்டு பணியில் வேளாண் துறையின் சார்பில் வேளாண்மை உதவி இயக்குனர் திரு எஸ் அருணன், வேளாண்மை அலுவலர் திருமதி ஜீவகலா, தோட்டக்கலை உதவி இயக்குனர் திருமதி சங்கீதா மற்றும் தோட்டக்கலை அலுவலர் பொன்முத்து மற்றும் பாப்பாரப்பட்டி வேளாண் அறிவியல் நிலைய முனைவர்  தங்கதுரை மற்றும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

Post Top Ad