தமிழ்நாடு அரசின் குறு சிறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் கீழ் இயங்கும் தமிழ்நாடு தொழிற் கூட்டுறவு வங்கி (தாய்கோ வங்கி) கிளைகளில் குறு உற்பத்தி நிறுவனங்களுக்கு மிக குறைந்த வட்டியில் 7% சதவிகித வட்டியில் ரூபாய் 20 இலட்சம் வரை நடைமுறை மற்றும் மூலதன கடன்கள், இயந்திரங்கள் கொள்முதல் செய்ய மற்றும் நிறுவனத்தின் கட்டிடங்கள் கட்டுதல் போன்றவற்றிற்கு புதிய திட்டமான கலைஞர் கடன் உதவி திட்டத்தின் கீழ் குறு உற்பத்தி நிறுவனங்களுக்கு அசையா சொத்து அடமானத்தின் பெயரில் கடன் வழங்கப்பட உள்ளது.
கடன் பெற தகுதிகள்
- இந்த திட்டத்தில் குறைந்தபட்ச வயது 18 ஆகவும் அதிக பட்ச வயது 65 க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
- புதிய மற்றும் ஏற்கனவே இயங்கி வரும் குறு உற்பத்தி நிறுவனங்கள்.
- தொழில் முனைவோர்களுக்கு சிபில் மதிப்பீடு 600 புள்ளிகளுக்கு குறையாமல் மற்றும் இரண்டு ஆண்டுகளாக ஏற்கனவே லாபத்தில் இயங்கும் நிறுவனங்கள்,
- பிற நிதி நிறுவனங்களில அதிக வட்டிக்கு பெற்ற கடன்கள் விதிமுறைக்கு உட்பட்டு குறைந்த வட்டிக்கு மாற்றிக் கொள்ளலாம்.
தருமபுரி மாவட்டத்தை சார்ந்த ஆர்வமுள்ள தொழில் முனைவோர்கள் மற்றும் குறு உற்பத்தி நிறுவனங்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், தருமபுரி 636 705. தொ.பே 04342 230892 மற்றும் கிளைமேலாளர், தாய்கோ வங்கி 15 சி, முதல் தளம், பிடமனேரி ரோடு, தருமபுரி 636 701 தொ.பே 04342 266744, 8925814607 தொடர்பு கொண்டு கடன் உதவி திட்டத்தில் பயன் அடையலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி,இ.ஆ.ப., அவர்கள் தனது செய்தியறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக