கொம்மநாயக்கனஅள்ளி கிராமத்தில் உள்ளாட்சி தின கிராமசபை கூட்டம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 23 நவம்பர், 2024

கொம்மநாயக்கனஅள்ளி கிராமத்தில் உள்ளாட்சி தின கிராமசபை கூட்டம்.


தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு ஒன்றியம், பி.செட்டிஅள்ளி ஊராட்சி, கொம்ம நாயக்கனஅள்ளி கிராமத்தில்  உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு   ஊராட்சிமன்ற தலைவர் கணபதி தலைமையில் கிராமசபை கூட்டம் நடைப் பெற்றது.


இக்கூட்டத்திற்க்கு துணை வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தாமரை, ஒன்றிய குழு உறுப்பினர் முத்துசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற செயலாளர் கோவிந்தன் வரவு செலவு கணக்குகள் மற்றும் பஞ்சாயத்து திட்ட பணிகள் குறித்து படித்து காட்டினார். அதனை தொடர்ந்து நடைப்பெற்ற கூட்டத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை ஊராட்சி எல்லைக்குள் பயன்படுத்த கூடாது என்றும், பொதுமக்கள் வீடுகள் தோறும் வழங்கும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து வழங்க வேண்டும் என்றும், குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துதல், மழைக்கால நோய்களை தவிர்க்க சுகாதாரத்தை மேம்படுத்துதல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.


இக்கூட்டத்தில் துணைத் தலைவர் ராணி சிவலிங்கம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை அளிப்பு உறுதி திட்ட ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம், வார்டு உறுப்பினர்கள் கிராம வறுமை ஒழிப்பு சங்கத்தினர், மகளிர் சுய உதவி குழுவினர், ஊர்பொதுமக்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad