தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு ஒன்றியம், ஜெர்தலாவ் ஊராட்சி, பனந்தோப்பு கிராமத்தில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு கிராமசபை கூட்டம் ஊராட்சிமன்ற தலைவர் முத்துமணி ஆனந்தன் தலைமையில் நடைப் பெற்றது. இக்கூட்டத்திற்க்கு வட்டார வளர்ச்சி அலுவலர் ரேணுகா முன்னிலை வகித்தார்.
ஊராட்சி மன்ற செயலாளர் சஞ்சீவன் வரவு செலவு கணக்குகள் மற்றும் பஞ்சாயத்தில் நடைப்பெற்ற மற்றும் நடைப்பெற்று வரும் திட்ட பணிகள் குறித்த அறிக்கையை வாசித்தார். அதனை தொடர்ந்து நடைப்பெற்ற கூட்டத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை ஊராட்சி எல்லைக்குள் பயன்படுத்த கூடாது என்றும், பொதுமக்கள் வீடுகள் தோறும் வழங்கும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து வழங்க வேண்டும் என்றும், குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துதல், மழைக்கால நோய்களை தவிர்க்க சுகாதாரத்தை மேம்படுத்துதல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இக்கூட்டத்தில் வார்டு உறுப்பினர்கள், மகளிர் சுய உதவி குழுவினர், ஊர்பொதுமக்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக