இலக்கியம்பட்டி அழகாபுரி ஸ்ரீ சிம்ம ஹாரூட வாராஹி அம்மன் நூதன ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் முன்னிட்டு இன்று கொடியேற்று விழா. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 4 நவம்பர், 2024

இலக்கியம்பட்டி அழகாபுரி ஸ்ரீ சிம்ம ஹாரூட வாராஹி அம்மன் நூதன ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் முன்னிட்டு இன்று கொடியேற்று விழா.


இலக்கியம்பட்டி அழகாபுரி ஸ்ரீ சிம்ம ஹாரூட  வாராஹி அம்மன்  நூதன ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் முன்னிட்டு இன்று கொடியேற்று விழா  அதைத்தொடர்ந்து. மகா கணபதி ஹோமம் லட்சுமி ஓமம் நவகிரக ஹோமம் நடைபெற்றது பின்னால் கொடியேற்றம் அதைத்தொடர்ந்து கங்காணம் கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. 


ஏழாம் தேதி ஞாயிற்றுக்கிழமை லக்கி மீட்டர்ஸ் சாலை மாரியம்மன் கோவிலில் இருந்து தீர்த்த குடம் அழைப்பு முளைப்பாரி ஊர்வலம் மற்றும் கரிகோல ஊர்வலம் நடைபெறும் கணபதி லட்சுமி நவகிரக ஓமம் நடைபெறும் அதைத்தொடர்ந்து வாஸ்துசாந்தி மற்றும் பிரவேச பலி நடைபெறும். 


மாலை ஆறு மணி மேல் முதல் கால பூஜை கணபதி பூஜை புண்யாக வாசம் எட்டாம் தேதி காலை 5 மணி அளவில் திருப்பணி எழுச்சி நடைபெறும் அது தொடர்ந்து இரண்டாம் கால பூஜை மற்றும் நாடிசந்தானம் ஸ்பர்சாபூதி திரவிய  ஹொமம் பூர்ணாபூதி நடைபெறும் காலை ஒன்பது மணிக்கு வாராஹி அம்மன் மகா கும்பாபிஷேக விழா நடைபெறும் அது தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும் என்று கோயில் நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி காளியப்பன் செய்திருந்தனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad