தர்மபுரி மாவட்டம், வெள்ளிசந்தை வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் குறுவட்ட அளவிலான அனைத்து துறை சார்ந்த மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாம், வருவாய் ஆய்வாளர் கோகிலா தலைமையில் நடைப்பெற்றது.
இதில் வெள்ளிசந்தை பிற்காவிற்க்கு உட்பட்ட கருக்கனஅள்ளி, அண்ணாமலைஅள்ளி, வெலகலஅள்ளி, பிக்கனஅள்ளி, மகேந்திரமங்கலம், ஜிட்டாண்டஅள்ளி, திம்மராயனஅள்ளி, ஜக்க சமுத்திரம் உள்ளிட்ட 8 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு, பட்டா மாறுதல், குடும்ப அட்டை, மின் இணைப்பு, முதியோர் ஓய்வூதியம், மாற்று திறனாளிகளுக்கான உதவி உள்ளிட்டவைகள் வேண்டி மனு அளித்தனர்.
இம்முகாமில் கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் அலுவலர்கள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக