தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொள்வதற்காக இன்று காலை தருமபுரி மாவட்டத்திற்கு வந்த சுற்றுலாத் துறை அமைச்சர் ராஜேந்திரன் தருமபுரி மாவட்டத்தில் வத்தல்மலை சாகச சுற்றுலா மையத்தை ஆய்வு செய்தார் அதன் பிறகு ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் தமிழ்நாடு அரசு தங்கும் விடுதியில் உள்ள சுற்றுலாப் பயணிகள் தங்கும் அறைகளின் தரத்தை ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் சுற்றுலா துறை மூலம் ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் ரூபாய் 18.50 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று முடியும் தருவாயில் உள்ள திட்டப்பணிகளை ஆய்வு மேற்கொண்டார். புதுப்பிக்கப்பட்ட தமிழ்நாடு தங்கும் விடுதிக்கு சொந்தமான உணவகம், பரிசல் நிறுத்துமிடம், ஆயில் மசாஜ் மேற்கொள்ளும் இடம், சுற்றுலாப் பயணிகள் உடை மாற்றும் அறை உள்ளிட்ட பகுதிகளை அமைச்சர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
35 ஆயிரம் கன தண்ணீர் காவிரி ஆற்றில் வந்தாலும் பாதுகாப்பாக ஊட்டமலை பரிசல் துறையில் பரிசல் இயக்க வேண்டும் என்ற பரிசல் ஓட்டிகளின் கோரிக்கை பரிசீலித்து அங்கு அதிகாரிகள் உரிய ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்றும், ஊட்டமலை பகுதியில் இந்து அறநிலையத்துறைக்கு சொந்த சுமார் 30 ஏக்கர் நிலத்தில் தண்ணீர் விளையாட்டு பூங்கா மற்றும் பொழுதுபோக்கு பூங்கா அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் ராஜேந்திரன் தெரிவித்தார்.
இந்த ஆய்வின் போது தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி நாடாளுமன்ற உறுப்பினர் பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜிகே மணி மாவட்ட திமுக கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி அரசு அலுவலர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக