116வது ஆதரவற்ற சடலத்தை நல்லடக்கம் செய்த மை தருமபுரி அமைப்பினர். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 5 நவம்பர், 2024

116வது ஆதரவற்ற சடலத்தை நல்லடக்கம் செய்த மை தருமபுரி அமைப்பினர்.

தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு சமூக பணிகளை செய்துவரும் மை தருமபுரி தன்னார்வலர்கள், ரயிலில் தவறி விழுந்து இறந்தவரின் உடலை நல்லடக்கம் செய்தனர், இது குறித்து அந்த அமைப்பின் தலைவர் சதீஷ்குமார் தெரிவிக்கையில்,  தருமபுரி மாவட்டம் புட்டிரெட்டிப்பட்டி ரயில் நிலையம் அருகே ரயிலில் இருந்து தவறி விழுந்த 35 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் சம்பவ இடத்திலேயே படுகாயம் அடைந்து இறந்துள்ளார். அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவமனை அனுப்பி வைத்தனர், பலியானவர் குறித்து விசாரித்ததில் அவரை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. 


இதனால் அவரின் உடலை அடக்கம் செய்ய போலீசார் முடிவுசெய்து, சேலம் இருப்புப் பாதை காவலர் சபரிநாதன், மை தருமபுரி அமரர் சேவை ஒருங்கிணைப்பாளர் அருணாசலம், தன்னார்வலர்கள் செந்தில், ஜெய் சூர்யா, விஜயகாந்த், கார்த்திக் ஆகியோர் இறுதி அஞ்சலி செலுத்தி நல்லடக்கம் செய்தனர், என தெரிவித்தார். மை தருமபுரி அமரர் சேவை மூலம் இதுவரை 116 ஆதரவற்ற உடல்களை நல்லடக்கம் செய்துள்ளனர்என்பது குறிப்பிடத்தக்கது. 

கருத்துகள் இல்லை:

Post Top Ad