மை தருமபுரி அமைப்பின் 1300ஆவது நாள் உணவு சேவை திட்டத்தில் கலந்து கொண்ட எண்ணங்களின் சங்கமம் NDSO பிரபாகரன். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 3 நவம்பர், 2024

மை தருமபுரி அமைப்பின் 1300ஆவது நாள் உணவு சேவை திட்டத்தில் கலந்து கொண்ட எண்ணங்களின் சங்கமம் NDSO பிரபாகரன்.


மை தருமபுரி அமைப்பின் சார்பாக பல்வேறு சமூக சேவைகளை அடித்தட்டு மக்களுக்கு சென்றடையும் வகையில் செய்து வருகின்றனர். பசித்தோருக்கு தினந்தோறும் உணவு சேவை, ஆதரவற்று இறந்த புனித உடல்கள் நல்லடக்கம், அவசர ரத்ததானம் உதவி, மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுதல் போன்ற மனிதநேயமிக்க சேவைகளை செய்து வருகின்றனர். தருமபுரி அரசு மருத்துவமனை எதிரில் கடந்த நான்கு வருடங்களாக உணவு வழங்கி வருகின்றனர். 


இன்று 1300 ஆவது உணவு சேவை நாளில் சிறப்பு விருந்தினராக எண்ணங்களின் சங்கமம் தலைவர் மாமனிதர் பிரபாகரன் அய்யா அவர்கள் கலந்து கொண்டார். எண்ணங்களின் சங்கமம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ், சௌந்திரராஜன், திருநெல்வேலி சதீஸ், பத்திர எழுத்தர் கணேசன், மருத்துவர் ஸ்ரீகாந்த், PSB சுரேஷ், சந்துரு, RRC ராமசாமி, விஸ்வநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


மை தருமபுரி அமைப்பின் நிறுவனர் சதீஸ் குமார் ராஜா, செயலாளர் தமிழ்செல்வன், ஒருங்கிணைப்பாளர்கள் அருள்மணி, அருணாசலம், மருத்துவர் முஹம்மத் ஜாபர், ஜெய் சூர்யா, பிரேமா, நித்யா ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad