இந்திய பள்ளிகள் விளையாட்டு குழுமம் சார்பாக நடைபெற்ற பெண்களுக்கான மாநில அளவிலான கிரிக்கெட் போட்டியில் பங்கு பெறக்கூடிய தேர்வில் அரசு மேல்நிலைப்பள்ளி நரிப்பள்ளியைச் சேர்ந்த மாணவி சா மனிஷா அவர்கள் தேர்வாகியுள்ளார், அவர் அடுத்த மாதம் ராஜஸ்தானில் நடைபெற உள்ள தமிழக அணியின் சார்பாக விளையாட உள்ளார், மற்றும் 2023-2024ம் கல்வியாண்டில் பள்ளிக் கல்வித் துறை சார்பாக நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் அரூர் சரக அளவிலான போட்டிகளை அரசு மேல்நிலைப்பள்ளி நரிப்பள்ளி மாணவர்கள் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றெடுத்தனர்.
அது மட்டுமில்லாமல் மாவட்ட அளவிலான போட்டிக்கு பல்வேறு மாணவர்கள் தகுதி பெற்றனர், குறிப்பாக 3000 மீட்டர் 1500 மீட்டர் 800 மீட்டர் வட்டு எறிதல் மும்முறை தாண்டுதல், உயரம் தாண்டுதல், 4X400 Relay போன்ற போட்டிகளுக்கு தகுதி பெற்றனர். மாவட்ட அளவிலான போட்டியில் 3000 மீட்டர் 1500 மீட்டர் தடை தாண்டும் ஓட்டம் ஆகிய போட்டிகளில் வெற்றி பெற்று தற்போது ஈரோட்டு மாநகரில் நடந்து வரும் மாநில அளவில் நடைபெற போட்டிக்கும் பங்கேற்க காவியா செந்தமிழன் சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக